Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாடியிலிருந்து குதித்து தற்கொலை.. பேஸ்புக் லைவில் வீடியோ வெளியிட்ட என்ஜினியரிங் மாணவர்

தேர்வுகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால் மனமுடைந்த பெங்களூரு மாணவர் மும்பையில் 19வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: தேர்வுகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால் மனமுடைந்த பெங்களூரு மாணவர் மும்பை ஹோட்டலில் 19வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக பேஸ்புக் லைவில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த தொழிர் அதிபர் ஒருவரின் மூத்த மகன் அர்ஜுன் பரத்வாஜ். மும்பையில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார்.

இவர் மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் தங்கியிருந்தார். 19வது தளத்தில் அறை எண் 1925ல் தங்கியிருந்த அவர், நேற்று அதிகாலை 3 மணியளவில் ஹேட்டல் முழுவதும் சுற்றிப்பார்த்த அர்ஜுன், நாள் முழுவதும் ஹோட்டல் ரூமிலேயே தங்கியிருந்தார்.

19வது மாடியில் இருந்து..

19வது மாடியில் இருந்து..

நேற்று மாலை 6.30 மணியளவில் ரூமின் ஜன்னலை உடைத்து மாடியில் இருந்து குதித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ஹோட்டல் ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலை கடிதம்

தற்கொலை கடிதம்

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையை ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்த டேபிளின் மீது இருந்து தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

பேஸ்புக்கில் வீடியோ

பேஸ்புக்கில் வீடியோ

அதில் தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியுள்ள அர்ஜுன், தனது பெற்றோர் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தான் தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக பேஸ்புக் லைவில் பேசி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

வீடியோவை வெளியிட வேண்டாம்

வீடியோவை வெளியிட வேண்டாம்

அவர் நாள் முழுவதும் மது அருந்தியதோடு, சிகரெட் புகைபிடித்தும் இருந்தது வீடியோவில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீக்கியுள்ள மும்பை போலீசார் அதனை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

போலீசார் கோரிக்கை

இளைஞரின் தற்கொலை மிகுந்த மனவருத்தத்தை தருவதாக தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவத்துள்ள போலீசார் இத்தகைய இளைஞர்கள் தங்களை நாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வில் தோல்வி..

தேர்வில் தோல்வி..

3ஆம் இன்னிஜனியரிங் தேர்வில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்ததால் மனமுடைந்த அர்ஜுன் பரத்வாஜ் இப்படி ஒரு சோக முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+