80 லட்ச ரூபாய் வைரத்தை தோண்டி எடுத்த பழங்குடி! ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்
பன்னா: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சுரங்கத்திலிருந்து பழங்குடி ஒருவர் ரூ.80 லட்சம் மதிப்பிலான வைரத்தைக் கண்டுபிடித்து எடுத்துள்ளார். இதுவரை கூலித் தொழிலாளியாக இருந்து வந்த அவர், இதன் மூலம் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறி இருக்கிறார்.
மத்தியப் பிரதேசம் பன்னா மாவட்டத்தில் உள்ள வைர சுரங்கம் மிகப் பிரபலமானது. அங்கே உள்ள சுரங்கங்களில் வைரத்தை எடுக்கும் தொழிலில் பலர் வேலை செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பன்னாவில் வாழ்ந்து வரும் கோண்டு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஆதாரமாக இந்த வைரச் சுரங்கங்கள் இருந்து வருகின்றன.

இங்கே பல ஆண்டுகளாக ராஜூ கோண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா சுரங்கங்களில் குழி தோண்டி எடுக்கப்படும் மணலை சல்லடைப் போட்டு சுத்தம் செய்யும் தொழிலைக் கச்சிதமாகச் செய்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் அவரது கைக்கு ஒரு சின்ன வைரம் கூட அகப்படவில்லை. ஆனால், அந்தச் சோக கதை ஒருநாள் மாறும் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
திடீரென்று அவர் கரங்களில் மின்னும் கண்ணாடி போன்ற ஒன்றைக் கண்டு எடுத்துள்ளார். அதைப் பார்த்த உடனேயே அதை வைரம் என கண்டுபிடித்துவிட்டார் ராஜூ. அது 19.22 காரட் வைரம். அரசு ஏலத்தில் சுமார் ரூ.80 லட்சத்திற்கு மேல் அதை விற்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"நான் இறுதியாக என் கைகளில் அதை எடுத்தபோது அது ஒரு வைரம்தான் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. இந்தக் கல்லைப் பெற நான் மதியம் முழுவதும் உழைத்தேன். ஆனால், இந்த நிலையை அடைவதற்கு நான் கடந்த 10 வருடங்கள் உழைத்துள்ளேன்" என்று கோண்டு கூறியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு பற்றிப் பரவசமடைந்த அவர், தனது குழந்தைகளின் எதிர்காலத்தை இதைவைத்து பிரகாசமாக மாற்ற விரும்புவதாகக் கூறி இருக்கிறார். "எனது குழந்தைகளின் படிப்பு செலவை நான் கவனித்துக் கொள்ள இது உதவும். இதன் மூலம் எனது பொருளாதாரக் கஷ்டம் எல்லாம் குறைந்து போகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றும் அவர் நெகிழ்ந்து போய் பேசியுள்ளார்.
இந்த வைரத்தை விற்று முதலில் தனது குடும்ப கடன் ரூ.5 லட்சத்தை அடைக்கப் போவதாகக் கூறியுள்ள கோண்டு மேற்கொண்டு ஏலத்தில் கிடைக்கும் பணத்தைத் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார். மிச்சம் உள்ள பணத்தில் ஒரு சொந்த வீடு கட்டி, நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 'இந்த வைரம் கிடைத்து விட்டாலும் இதற்குப் பிறகும் நான் வைரங்களைத் தேடுவதை நிறுத்த மாட்டேன்" என்கிறார் இவர்.
வட மத்தியப் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பன்னா, பல நூற்றாண்டுகளாக வைரச் சுரங்கத்திற்காக முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. ஆனாலும் பல ஆண்டுகளாக வைரம் கிடைப்பது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது அங்கே பெரிய வைரம் கிடைப்பது அரிதான விசயம். கடந்த ஆண்டு நொய்டாவில் வசிக்கும் ஒருவர் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 8 காரட் வைரத்தைக் கண்டுபிடித்தார். இங்கே வேலை செய்தால் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவானது. எட்டு மணி நேர வேலைக்கு 250 முதல் 300 ரூபாய் வரை கிடைக்கும்.
கோண்டு வழக்கம் போல அதிகாலையில் கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி கிராமத்தில் உள்ள ஒரு சுரங்கத்திற்குப் போய் உள்ளார். இதை அவரது தந்தை கான்ராட்க் வேலை எடுத்துச் செய்து வந்துள்ளார். “நாங்கள் பெரும்பாலும் மழைக்காலங்களில் விவசாய வேலை செய்வோம். அது போகக் கொத்தனார் வேலைகளைச் செய்கிறோம். கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால் வைரச் சுரங்கம் பணியையும் செய்து வருகிறோம்” என்றார் கோண்டு. இதற்கு முன் இவர் டிராக்டர் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) பன்னாவில் இயந்திரமயமாக்கப்பட்ட வைரச் சுரங்கத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் அதே வேளையில், கோண்ட் போன்ற தொழிலாளர்கள் பகுதிநேரமாகக் குழிகளை கையால் தோண்டி வைரக் கற்களைத் தேடும் வேலையைச் செய்து வருகிறார்கள். “குழிகளைத் தோண்டி அங்கே கிடைக்கும் பாறைகளையகற்ற மண்வெட்டிகளைத் தான் பயன்படுத்துகிறோம். மணல் துகள்களை ஒரு சல்லடையில் கழுவி, வைரம் கிடைக்கிறதா என்று ஆராய்வோம்” என்கிறார்.
கல்லைக் கண்டுபிடித்த பிறகு, கோண்டு அதை அரசாங்க அதிகாரிகளிடம் டெபாசிட் செய்துள்ளார். அடுத்து நடக்க இருக்கும் ஏலத்தில் வைரம் விற்பனைக்கு விடப்படும் என்று பன்னா வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங் தெரிவித்திருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications