டவ் தே புயல்: குஜராத்தில் சூறைக் காற்று, பேய் மழையுடன் கரையை கடந்த வீடியோ காட்சிகள்!
அகமதாபாத்: குஜராத் மாநிலம் உன் எனப்படும் உன்னத்நகரில் சூறாவளி காற்றுடன் சுழன்றடித்த கனமழை குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று அதிகாலை குஜராத்தின் சவுராஷ்டிரா அருகே கரையை கடந்தது. இந்த புயல் தீவிர புயலாக காலை 11 மணிக்கு வலுவிழக்கும்.
இதனால் சவுராஷ்டிரா, கட்ச், கொங்கன் மற்றும் ராஜஸ்தானின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும். இன்று மதியம் தீவிர புயல், சாதாரண புயலாக வலுவிழக்கும். பின்னர் காற்றழுத்தமாக இன்று இரவுக்குள் வலுவிழந்துவிடும்.

குஜராத்
இந்த புயலால் குஜராத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா ஆகிய மேற்கு மாநிலங்களிலும் புயலின் கோரத்தாண்டவத்தால் மகாராஷ்டிராவில் 12 பேரும், கர்நாடகாவில் 8 பேரும் இறந்தனர்.

படகுகள்
அரபிக் கடலில் இரு படகுகள் மூழ்கியதால் 3 மாலுமிகள் காணாமல் போய்யுள்ளனர். ஆங்காங்கே மரங்கள் வேரோடு விழுந்துள்ளன. அது போல் நகரில் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

உன்னத்நகர்
இந்த நிலையில் குஜராத்தின் உன் என்கிற உன்னத்நகரில் நேற்றைய தினம் புயல் கரையை கடக்கும் போது மிக அதி வேகமாக காற்று வீசியது. மணிக்கு 150 கி.மீ. வேகத்திற்கு மேல் காற்று வீசியது. அத்துடன் கனமழையும் பெய்தது. மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த காற்று வீசியது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
|
கர்நாடகா
புயல் கரையை கடந்த நிலையில் மீட்பு பணிகள் ஆங்காங்கே துரிதமாக நடைபெற்று வருகின்றன. டவ் தே புயல் கர்நாடகாவில் தொடங்கி குஜராத் வரை புரட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications