அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில்.. பொங்கிய நெட்டிசன்கள்
தர்மசாலா: புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் தலாய் லாமா 8 வயது சிறுவனை பொது இடத்தில் வைத்து உதட்டில் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலாய் லாமா.. ஒரு சர்ச்சைக்குரிய மதத்தலைவராக தற்போது வரை பார்க்கப்படுகிறார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பல மோதல்கள் இருக்கின்றன. அதில் ஒரு மோதல் போக்குக்கு இவரும் காரணமாக இருந்திருக்கிறார். அதாவது கடந்த 1959ம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவின் ஒரு பகுதியாக இருந்த திப்பெத்தில் பெரும் நிலம் கொண்ட பணக்காரர்கள் கலகத்தில் ஈடுபட தொடங்கினர். ஏனெனில் சீனா அப்போது சோஷலிச பாதையில் தீவரமாக சென்றுக்கொண்டிருந்தது.

பெரும் பணக்காரர்கள் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலையில் இந்த அரசு ஏற்கவில்லை. எனவே இவர்கள் கலகத்தில் ஈடுபட இந்த கலகத்திற்கு ஆதரவளித்தவர்தான் தலாய் லாமா. இந்த வன்முறையை சீன ராணுவம் அடக்கிவிட்டது. ஆனால் தலாய் லாமா தலைமறைவாகிவிட்டார். தலாய் லாமா தலைவராக இருந்த இந்த புத்த மதத்திலேயே வேறு கருத்துக்களும் இருந்தன. அதாவது தலாய் லாமாவுக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்த பஞ்சன் லாமா சீன அரசின் பக்கம் நின்றார். எனவே அப்போது தலைமறைவான தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.
அப்போதுதிலிருந்து இவரது விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கம் மோதல் போக்கு நீடித்து வருகின்றன. அப்போதலிருந்து இப்போது வரை அவர் திபெத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் சீனா அதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. மட்டுமல்லாது புத்த மதத்தின் தலைவராக தங்களது அரசு நியமிக்கும் நபரே இருப்பார் என்று கூறி வருகிறது. இந்த சண்டை ஒருபுறம் போய்க்கொண்டிருக்க மறுபுறம் தலாய் லாமாவின் கருத்துக்கள் அவ்வப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தன.
கடந்த 2019ம் ஆண்டு பெண் தலாய் லாமா பற்றி அவர் கூறியதாவது, "என்னுடைய பொறுப்புக்கு ஒரு பெண் வருவதெனில் அவர் அதிக கவர்ச்சியாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் புத்த மதத்தின் தலைவராக இருக்கும் தலாய் லாமா இவ்வாறு பேசியிருப்பது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், புத்த மதத்தில் அறிவை போன்று அழகுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் இருப்பதாக தலாய் லாமா சமாளித்தார். ஆனால் கண்டனங்கள் வலுத்ததால் அவர் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏறத்தாழ 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனுக்கு ஆசி வழங்கும்போது அவனது நெற்றியுடன் தனது நெற்றியை சாய்த்து வைத்துக்கொள்கிறார். பின்னர் அடுத்த சில நொடிகளில் அவர் சிறுவனின் உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் சிறுவன் விலகிவிடவே, பின்னர் சிரித்துவிட்டு தனது நாக்கை வெளியில் நீட்டி அதை வாயால் சுவைக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகார்களில் சாமியார்கள், ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து சிக்கி வரும் நிலையில் இவரது வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.
சீனாவின் தௌலாதார் மலைத்தொடரில் அமைந்துள்ள புத்த மடத்தை விட்டு இந்தியாவின் தர்மசாலாவில் தலாய் லாமா குடியேறி ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவை பொறுத்த அளவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களது அனுமதியின்றியோ/அனுமதியுடனோ பாலியல் ரீதியாக தொடுவது, அல்லது பாலியல் செயல்பாடுகளை செய்ய தூண்ட சொல்வது ஆகியவை சட்டபடி குற்றமாகும். இது போக்சோ வழக்கின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications