Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்பப் பார்த்தாலும் 2வது மனைவியுடன் மட்டும்.. ஆத்திரத்தில் முதல் மனைவி செய்த வேலைய பாருங்க!

இரண்டாவது மனைவியுடன் மட்டும் கணவன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி அவரது ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2வது மனைவியுடன் இருந்ததால் ஆத்திரம்..கணவரின் ஆணுறுப்பை அறுத்த முதல் மனைவி- வீடியோ

    முசாஃபர் நகர்: உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது மனைவியுடன் மட்டும் கணவன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி அவரது ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் வழக்கமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்தான் அதிகமாக நடக்கும். இந்நிலையில் பெண் ஒருவர் தனது கணவருக்கு கொடூர தண்டனை கொடுத்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டம் மிம்லானா பகுதியை சேர்ந்தவர் யூனஸ் அகமது. 45 வயதான இவருக்குதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

    இரண்டாவது திருமணம்

    இரண்டாவது திருமணம்

    யுனஸ் அகமதுவுக்கும் அவரது மனைவிக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் முதல் மனைவியின் சம்மதத்துடன் அகமது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

    வீட்டுக்கு வருவதேயில்லை

    வீட்டுக்கு வருவதேயில்லை

    கடந்த ஆண்டுதான் அகமது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் முதல் மனைவியின் வீட்டுக்கு வருவதேயில்லை என தெரிகிறது.

    இரண்டாவது மனைவி

    இரண்டாவது மனைவி

    இதன் காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருக்கட்டத்தில் இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே இருந்துள்ளார் அகமது.

    2வது மனைவியுடன் உல்லாசம்

    2வது மனைவியுடன் உல்லாசம்

    இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி நேற்று முன்தினம் அகமதுவை தேடி இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்தார் முதல் மனைவி.

    ஆணுறுப்பு துண்டிப்பு

    ஆணுறுப்பு துண்டிப்பு

    இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர், கத்தியை எடுத்து கணவரின் ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டினார். இதனை சற்றும் எதிர்பாராத அகமது வலியில் அலறி துடித்தார்.

    மனைவி கைது

    மனைவி கைது

    அகமதுவின் சத்தத்தை கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் முதல் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோபத்தில்

    கோபத்தில்

    அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் கணவர் தன்னுடன் நேரத்தை செலவழிக்காமல் தன்னை விட்டு விலகிச்சென்றதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

    10 ஆண்டுகள் சிறை

    10 ஆண்டுகள் சிறை

    இதைத்தொடர்ந்து கணவரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய முதல் மனைவிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+