11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்.. கைது செய்த கேரள போலீஸ்!

11 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

நொய்டா: 11 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த லோரன் ஜஸ்டின் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது மனைவி மேகா 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

A woman arrested in Noida : who married 11 persons and theft their jewels, money!

இதையடுத்து 2 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த போலீசார் நொய்டாவை சேர்ந்த மேகா பார்கவ் அவரது சகோதரர் தேவேந்திர ஷர்மா, மற்றும் அவரது சகோதரி பிராச்சி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்கு ஆசைப்பட்டு மேகா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேகா பார்கவ் இந்தூரைச் சேர்ந்தவர் ஆவர்.ஏற்கனவே திருமணம் ஆன இவர் கணவரை பிரிந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரளாவில் புகார் அளித்த ஜஸ்டின், மேகாவின் 4வது கணவர் ஆவார்.

வசதியான பார்ப்பதற்கு சுமாராக உள்ள ஆண்களை தேர்வு செய்யும் மேகா அவர்களை திருமணம் செய்து இதுபோன்ற போன்ற ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட பிறகு நேரம் பார்த்து உணவு அல்லது பானங்களில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது மேகா பார்கவ் கேரள காவல்துறையினரால் கொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+