15 மாத குழந்தையை உதைத்து, கழுத்தை நெரித்து டார்ச்சர்.. சிசிடிவியில் சிக்கிய தாய்.. காரணம் என்ன?
புவனேஸ்வரம்: ஒடிஸாவில் தாய் ஒருவர் 15 மாத குழந்தையை சிறிதும் ஈவு இரக்கமின்றி எட்டி உதைப்பதும், கழுத்தை நெரிப்பதும் போன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள கோப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஒடிஸாவில் ஒரு பெண்ணுக்கு 15 மாத குழந்தை உள்ளது. இந்த குழந்தையை அந்த பெண் மிக கொடூரமாக அடித்து உதைக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
அந்த காட்சிகளுடன் காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார். அப்போது அதை பார்த்த போலீஸாருக்கு ஒரே அதிர்ச்சி.

மாற்றாந்தாய்
காரணம் அந்த பெண் பெற்ற தாய் போல் அல்லாமல் ஏதோ மாற்றாந்தாய் போல் நடந்து கொண்டார். குழந்தையை கண்மூடித்தனமாக அடிப்பதும், ஏதோ பந்து போல் உதைப்பதும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் கழுத்தையும் நெரிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

தாய், தந்தையருக்கும் கொடுமை
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் அவர் மீது புகார் அளித்தார். தன்னுடைய குழந்தையை இது போல் கொடுமைப்படுத்துவது அல்லாமல் நிறைய நேரங்களில் தனது பெற்றோரையும் அவர் கொடுமைப்படுத்தி டார்ச்சர் செய்ததாகவும் அந்த கணவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

விசாரணை
வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் என் குழந்தைக்கு காயங்கள் ஏதாவது இருக்கும். இதனால் சந்தேகப்பட்டு என் மனைவிக்கு தெரியாமல் சிசிடிவி கேமராவை பொருத்தினேன். அதில் தான் இந்த காட்சிகள் படமாகியுள்ளன என்றார். அந்த வீடியோ காட்சிகளை கணவரே சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

கணவர் மீது கடும் குற்றச்சாட்டு
அப்போது அவர் கணவரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். மாறாக தனது கணவரும் தனது மாமியார் , மாமனாரும்தான் தன்னை கொடுமைப்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அவர்கள் உணவு கூட அளிப்பதில்லை என்றும் இது போன்ற காரணங்களால் நான் பல தடவை கஷ்டப்பட்டுள்ளேன். பசிக் கொடுமையால் தான் எனது குழந்தையிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதாயிற்று என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications