Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடலில் ஒட்டுத்துணி இல்லை.. இரவில் நிர்வாணமாக சாலையில் ஓடிய இளம்பெண்! வெளியான ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் உடலில் துணி எதுவும் இன்றி நிர்வாணமாக சாலையில் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னை பலாத்காரம் செய்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்ததாக அவர் கூறிய நிலையில் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் குறித்த விபரம் வருமாறு: அதாவது ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் நேற்று இரவு 25 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி நிர்வாணமாக அந்த பகுதியில் செல்வோரிடம் உதவி கோரினார்.

A woman who ran away without dress in Rajasthan and she claimes escaped from gang rape

ஆனால் அந்த பெண்ணுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்? என நினைத்து வாகன ஓட்டிகள் யாருக்கு அவருக்கு உதவி செய்யவில்லை. இறுதியாக ஒரு மணிநேரத்துக்கு பிறகு அந்த பெண் அருகே உள்ள கங்காபூர் கிராமத்துக்கு சென்றார்.

இளம்பெண் ஆடையின்றி ஓடிவருவதை பார்த்து ஷாக்கான கிராம பெண்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று அணிந்து கொள்ள ஆடை கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண் கூறிய சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதுதொடர்பாக அந்த பெண், ‛‛நான் இரவில் உணவு சாப்பிட்டுவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது 3 பேர் கும்பல் என்னை கடத்திவிட்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்று ஆடைகளை பறித்து வைத்து கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர். கூட்டு பலாத்காரம் செய்தனர். 3 பேரும் குடிபோதையில் இருந்தனர்.

இதையடுத்து அவர்களை விட்டு ஆடையின்றி தப்பித்து வந்துவிட்டேன். உதவி கோரினாலும் கூட யாரும் உதவ முன்வரவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர் என என்னை நினைத்து விட்டனர்'' என கூறி அழுதுள்ளார். இதைக்கேட்ட கிராம மக்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து இளம்பெண் போலீசில் புகாரளித்தார்.

அந்த புகாரில் தன்னை பலாத்காரம் செய்த நபரில் ஒருவர் குறித்த விபரத்தை போலீசிடம் இளம்பெண் தெரிவித்து இருந்தார். அதன்படி விசாரணை நடத்திய போலீசார் சோட்டு (வயது 42), கிர்தாரி (30) ஆகியோரை கைது செய்தனர். இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததை மறுத்தனர். அதோடு அவர்கள் கூறிய தகவல் என்பது போலீசாரை திடுக்கிட வைத்தது. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவர்களுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், அந்த பெண் தனது விருப்பத்தின் பெயரில் தான் தனியாக உள்ள வீட்டில் தங்களுடன் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இரவு முழுவதும் தங்களுடன் இருக்கும்படி பெண்ணிடம் கூறினோம். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பெண் தனது ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு கூட்டு பலாத்காரம் எனக்கூறி நாடகமாடியதாக தெரிவித்தனர். இதனால் இந்த சம்பவத்தில் எது உண்மை என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+