மச்சினிச்சிக்கு திருமணம்.. செம டென்ஷனில் எகிறிய 'மாமா'.. கடைசிவரை சாதிச்சிட்டாரே.. பரிதாப மனைவி
மதுராந்தகத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்
செங்கல்பட்டு: தனது தங்கையின் திருமணத்திற்கு போக கணவன் அனுமதி மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தின் மெய்யூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த நந்தினி எனும் இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ராஜ்குமார் நந்தினியுடன் அடிக்கடி வெளியில் சுற்றியுள்ளார். இப்படி இருந்த நட்பானது ஒரு கட்டத்தில் காதலாக பரிணமித்திருக்கிறது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் நந்தினியின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே இரு வீட்டு சம்மதத்தையும் தாண்டி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இதனையடுத்து இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குடும்பம் இப்படி மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருக்கையில் நந்தினி தனது தாய் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம் பிரச்னை வெடித்திருக்கிறது.

தாய்வீடு
இவ்வாறு இருக்கையில் நந்தினியின் தங்கைக்கு சமீப நாட்களாக மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். இதில் எதிர்பார்த்ததைப் போலவே மாப்பிள்ளையும் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த சடங்குகளுக்கு செல்ல நந்தினி முயன்றபோது ராஜ்குமார் அதற்கு அனுமதி மறுத்திருக்கிறார். நந்தினியின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் தொடங்கியதிலிருந்து இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்திருக்கிறது. இதனையடுத்து நந்தினியின் திருமணமும் நெருங்கியிருக்கிறது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னரே வந்துவிட வேண்டும் என நந்தினியின் பெற்றோர்கள் அழைக்க நந்தினியும் வருவதாக கூறியுள்ளார்.

சண்டை
ஆனால் இங்கு ராஜ்குமார் இதற்கு சம்மதிக்கவில்லை. தனக்கு தன்னுடைய தாய் வீடு எவ்வளவு முக்கியம் என்பதை நந்தினி எடுத்து சொல்லியும் ராஜ்குமார் கேட்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் கோபமாக சண்டையிட தொடங்கியுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த ராஜ்குமார் நந்தினியை அடித்திருக்கிறார். இதில் மனமுடைந்த நந்தினி தன்னுடைய அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையில் தகவல் அளித்துள்ளனர்.

தங்கை திருமணம்
தகவலையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "இவர்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டனர். தனது தங்கையின் திருமணத்திற்கு அனுப்பி வைக்காததாலும், தன்னை அடித்ததாலும் நந்தினி தீக்குளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் எது உண்மையென்று தெரியவில்லை. விசாரணையில்தான் முழு உண்மையும் வெளிவரும். திருமணமான ஒரு சில ஆண்டுகளிலேயே நந்தினி உயிரிழந்துள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

தற்கொலை
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டவுடன் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல இந்த சம்பவம் குறித்து ஆதாரமில்லாத தகவல்களை பரப்ப வேண்டாம்" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். தங்கையின் திருமணத்திற்கு கணவன் அனுப்பி வைக்காததால் ஆத்திரமடைந்து இளம்பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications