ஆதார் அட்டையை ஒட்டுமொத்தமாக கைவிட மத்திய அரசு முடிவு?
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய ஆதார் அடையாள அட்டை மற்றும் அதன் மூலம் மானியம் வழங்கும் திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு மானியங்களை வங்கி மூலம் பெற ஆதார் அட்டையை கடந்த காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது. அத்துடன் பலகோடி ரூபாய் செலவில் ஆதார் அட்டைகள் தயாரித்து வழங்கும் பணியும் நடைபெற்றது.

இருப்பினும் ஆதார் அடையாள அட்டை நாடு முழுவதும் முழுமையாக வழங்கப்படவில்லை. சில மாநிலங்களில் ஆதார் அட்டை மூலம் மத்திய அரசின் மானியங்களை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. தற்போது பிரதமராக உள்ள மோடி, அப்போது ஆதார் அடையாள அட்டைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தையே கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஆதார் அடையாள அட்டைக்கான மத்திய அமைச்சர் குழு கலைக்கப்பட்டது.
இதனால் ஆதார் அடையாள அட்டை ரத்து செய்யப்பட இருக்கிறது. அத்துடன் ஆதார் அட்டை மூலம் அரசு மானியம் வழங்கும் முறையும் ரத்து செய்யப்பட இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications