ஆமா.. இங்க இருந்த ஆம் ஆத்மிய எங்க காணோம்.. 5 மாநில தேர்தலில் பரிதாபகர நிலையில் கெஜ்ரிவால் கட்சி
டெல்லி: 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடை தொடர்ந்து வட மாநிலங்களில் வலுவான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்று கூறி வரும் ஆம் ஆத்மி கட்சி, 3 மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஒருவர் வட இந்தியாவிலேயே "மிகப்பெரிய எதிர்க்கட்சி" ஆம் ஆத்மி என்று கூறினார். 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி அதில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சி முக்கிய ஜாஸ்மினா ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "இன்றைய முடிவுகளுக்குப் பிறகு, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 2 மாநிலங்களில் அரசாளும் ஆம் ஆத்மி கட்சி வட இந்தியாவில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக தோன்றுகிறது," என்று பதிவிட்டு உள்ளார்.

தான் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள காங்கிரஸின் தோல்வியை தொடர்ந்து, இந்த கருத்தை முன்வைத்த அவர், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடு மற்றும் வாக்கு சதவிகிதம் இன்னும் மோசமாக இருந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை. இந்த மூன்று மாநிலங்களிலும் எந்தவொரு தொகுதியிலும் ஒரு இடத்தைக்கூட ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறல்லை. மேலும் NOTA வை விட குறைந்த வாக்குகளை பல தொகுதிகளில் அக்கட்சி பெற்றது.
இந்த தேர்தல் முடிவை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், "மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெற்ற பாஜகவை நாங்கள் பாராட்டுகிறோம். 'முக்கியமந்திரி லாட்லி பெஹ்னா அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கப்படும் என்று மனதார நம்புகிறோம். பாஜக தனது வாக்குறுதிக்கு ஏற்ப ரூ.450 க்கு எல்பிஜி சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் வழங்கும் என்று நம்புகிறோம். நாடு முழுவதும் மலிவான விலையில் எல்பிஜி சிலிண்டர் வழங்கப்பட வேண்டும்.
மூன்று மாநிலங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்று நாங்கள் கோருகிறோம். கூட்டணி தாக்குப்பிடித்து தொடர்ந்தால், 2024 தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். கர்நாடகா மாநில தேர்தலில் 31 தொகுதிகளில் பாஜக தனது டெபாசிட்டை இழந்தது. பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் தானே பிரச்சாரம் செய்தார், ஆனால் பாஜக 173 தொகுதிகளிலும் தோல்வியடைந்து, NOTA வை விட குறைந்த வாக்குகளைப் பெற்றது. இது குஜராத்தில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை பாதித்ததா?" என்று தெரிவித்து உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தனித்து போட்டியிட்டும் தனக்கு மிகக் குறைந்த அளவிலேயே வாக்கு சதவீதம் கிடைத்தது என்பதை குறிப்பிடாத ஆம் ஆத்மி கட்சி, தாங்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளதாகவும், தங்களின் கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications