“வயிறு நிறைய சோறு 10 ரூபாய்ல போட்டே ஆகனும்” - காங்கிரஸ்க்கு புது செக் வைக்கும் ஆம் ஆத்மி
டெல்லி: ரூ.10 தர்றோம்... வயிறு நிறைய சோறு போடுவீங்களா என்று கேட்டு காங்கிரசுக்கு புது தலைவலியை ஆரம்பித்துள்ளனர் ஆம் ஆத்மி கட்சியினர்.
சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வோர் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாப்பர் அளித்த பதில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
"ரூ.10 இருந்தாலே ஏழைகள் தங்கள் பசியை போக்கிக் கொள்ள முடியும்" என பாப்பர் கூறினார். இதற்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்காக பாப்பர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.இந்த விவகாரத்தை மீண்டும் கிளறியிருக்கிறது ஆம் ஆத்மி.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஷாஜியா இல்மி. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் நடிகரும், அரசியல்வாதியுமான ராஜ் பாப்பர்.
இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு ஷாஜியா இல்மி அளித்த பேட்டியில் , "நானும் என் கட்சிக்காரர்களும் ஆளுக்கு ஒரு 10 ரூபாய் நோட்டுடன் ராஜ் பாப்பரிடம் போகப் போகிறோம். 10 ரூபாயில் அவரால் எங்களுக்கு வயிறாற சோறு போட முடியுமா என்பதை பார்க்கப் போகிறோம்" என கூறியிருக்கிறார். இதனால், ராஜ் பாப்பருக்கு புது தலைவலி ஆரம்பித்துள்ளது.
ஷாஜியா இல்மி முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால், அந்த கருத்தை ஷாஜியா மறுத்து வந்த நிலையில் காஜியாபாத் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆனாலும், தனக்கு டெல்லியில் சீட் வழங்கப்படவில்லையே என ஒருபுறம் அவர் கவலைப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கவலை ஒருபுறம் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த அளவுக்கு ஆறுதல் அடையலாமே என்கின்றனர் விவரம் தெரிந்த அவரது கட்சியினர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications