தப்பு செஞ்சிருக்கார் அருண் ஜெட்லி... ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு... பதவி விலக வலியுறுத்தல்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக பொறுப்பு வகித்தபோது பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் குமார் விஸ்வாஸ், தீபக் வாஜ்பாய், ராகவ்சந்தா, அசுதோஷ் ஆகியோர் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. டெல்லி கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் 54 கோடிக்கு எவ்வித கணக்கும் இல்லை. போலியான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, அதன் பெயரில் பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
அருண்ஜெட்லி காலத்தில் 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் நிறைவடைவதற்கு முன்பாகவே அந்த நிறுவனங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.55 லட்சம் வீதம் 3 கம்பெனி்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதன் மூலம் அவருக்கு நெருக்கமான நண்பர்களின் கம்பெனிகள் கோடிக்கணக்கில் லாபம் அடைந்துள்ளன. செலவு செய்யப்பட்ட பணத்திற்கு முறையான ரசீது இல்லை. இந்த சங்கத்தின் பொருளாளர் நரேந்திரபத்திராவுக்கும் ,ஜெட்லிக்கும் உள்ள உறவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் .
எனவே இந்த விவகாரத்தில் ஜெட்லி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமானால் ஜெட்லியை அமைச்சர் பொறுப்பில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications