• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவி விவாத நிகழ்ச்சியால் விபரீதம்: ஆம் ஆத்மி, பாஜக தொண்டர்கள் மோதல் - 5 பேர் காயம்

|

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி, பாஜக தொண்டர்கள் இடையே உண்டான மோதலில் 5 பேர் காயமடைந்தனர். ஆம் ஆத்மி வேட்பாளரின் வாகனமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், டெல்லியில் 49 நாட்களில் ஆட்சியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அங்கு ஆட்சியமைக்க அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து முழு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

AAP, BJP workers clash in Delhi, five injured

இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பாக துக்ளக்காபாத் என்ற இடத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஆம் ஆத்மி மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இருகட்சித் தொண்டர்களும் திடீரென மோதிக் கொண்டனர்.

இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதாகவும், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 5 தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும், இச்சம்பவத்தில் அத்தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சாஹி ராமின் வாகனம் தீவைத்து கொளுத்தப்பட்டது.

காயமடைந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோவிந்தபுரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வன்முறை தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியினர் மீது பாரதிய ஜனதா தலைவர்களும், அக்கட்சியினர் மீது ஆம் ஆத்மி தலைவர்களும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
At least five people were injured on Saturday in a clash between AAP and BJP workers following a debate show on a Hindi television channel, police said
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more