டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் மோடி அரசின் மீதான வாக்கெடுப்பே: ஆம் ஆத்மி, காங்கிரஸ்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மீதான வாக்கெடுப்புதான் என்று ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, டெல்லியில் பிரதமர் மோடி போட்டியிடவில்லை. இத்தேர்தல் டெல்லி முதல்வரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

இத்தேர்தல் முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அளிக்கும் கருத்துகளின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார். இதே கருத்தை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவும் கூறியிருந்தார்.
ஆனால் வெங்கையா நாயுடுவின் இக்கருத்துக்குப் பதிலளித்துள்ள ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சிசோடியா, டெல்லி தேர்தல் முடிவுகளைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது. டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு உட்பட பல்வேறு விஷயங்களின் மோடி அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்த இருக்கிறது டெல்லி தேர்தல் முடிவுகள் என்றார்.
மற்றொரு ஆம் ஆத்மி தலைவரான ஆஷிஸ் கேத்தான் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு லோக்சபா தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மோடி அரசு யு டர்ன் அரசாக இருக்கிறது.
டெல்லியில் நடைபெற இருப்பது முதல்வருக்கான தேர்தல்தான். 8 மாதங்களுக்கு முன்னரே பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். டெல்லியில் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய முதல்வரைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.
இங்கு குடிநீர், கல்வி, மின்சாரம், பாதுகாப்பு என 16 பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றைத் தீர்க்கக் கூடிய ஒரு முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவாலைத்தான் டெல்லிவாக்காளர்கள் பார்க்கின்றனர் என்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த்சர்மா கூறுகையில், கடந்த 9 மாதங்களாக பாரதிய ஜனதா ஆட்சி நடத்தி வருகிறது. அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
கச்சா எண்ணெய் விலை சரிவு கூட சர்வதேச சந்தையில் நிகழ்ந்த மாற்றமே. நாட்டின் உற்பத்தி குறைந்து போய்விட்டது. பொருளாதார மேம்பாடு என்பது எங்கே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. டெல்லி என்பது 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசத்தவர் வசிக்கும் மாநிலம். இது மோடி அரசு மீதான வாக்கெடுப்பாக கருதலாம்.
நாடு விடுதலை அடைந்ததில் இருந்து ஒரு சட்டசபை தேர்தலில் ஒரு பிரதமர் இப்படி கண்ணியகுறைவான வார்த்தைகளை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதே இல்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications