போலி நிறுவனங்களிடமிருந்து ஆம் ஆத்மிக்கு ஹவாலா முறையில் நன்கொடை வந்ததா?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு போலியான நிறுவனத்திடமிருந்து ஹவாலா முறையில் நன்கொடை வந்துள்ளதாகவும், வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில், இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் ஆம்ஆத்மி தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சில முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு, நன்கொடை கொடுத்த நிறுவனத்தை பற்றி விசாரிக்கும்போது, அந்தநிறுவனத்துக்கு எந்தவித வருமானமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எந்த ஒரு வர்த்தக நடவடிக்கைகளிலும் இந்த நிறுவனம் ஈடுபடவில்லை. இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் எப்படி நன்கொடை கொடுத்திருக்க முடியும்? ஆம் ஆத்மிக்கு நன்கொடை கொடுத்தவர் 11 நிறுவனங்களுக்கு இயக்குநராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் வசிப்பதாக கூறப்படும் முகவரியில், ஒரு பாழடைந்த வீடு தான் உள்ளது. ஆம் ஆத்மியின் இந்த முறைகேடு குறித்து சட்டப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஆம் ஆத்மிக்கு கோல்மைன் பில்ட்காம் பி லிட், இன்போலான்ஸ் சாப்ட்வேர் சொல்யூசன் லிட், சன்விசன் ஏஜென்சி மற்றும் ஸ்கைலைன் இரும்பு மற்றும் உருக்கு பி லிட் ஆகிய பெயரில் நன்கொடை வந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில், எங்களுக்கு எதிராக சதி நடக்கிறது. தோல்விபயம் காரணமாக பா.ஜ.,இவ்வாறு செய்கிறது. டெல்லி மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள். இந்த புகார்கள் மக்களுக்கு தான் சோதனை என கூறினார்.
ஹவாலா வழிமுறையில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஆம் ஆத்மி ஈடுபட்டு இருப்பதாக பா.ஜனதாவைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் பியுஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேட்டுக்கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications