நக்சல் கொள்கையை பின்பற்றுகிறது ஆம் ஆத்மி கட்சி: சு.சாமி சொல்கிறார்
மும்பை: ஆம் ஆத்மி கட்சி நக்சல் கொள்கைகளை பின்பற்றி வருவதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க போவதாக கூறி வருகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல். அவர் ஒரு போதும் ஊழலை ஒழிக்கப்போவதில்லை.

ஆம் ஆத்மி கட்சிக்கு கொள்கைகள் என்பது இல்லை. அவர்கள் நக்சல் இயக்க கொள்கைகளை பின்பற்றுகின்றனர். இந்த கொள்கையினால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது. ஆம் ஆத்மி கட்சியால் சிறிது காலமே இயங்க முடியும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களை வசியப்படுத்தி அதன் மூலம் தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொண்டுள்ளார்.தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மையான மக்கள் கெஜ்ரிவாலின் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைந்து விட்டது.
இந்த தேர்தலில் 28 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள ஆம் ஆத்மிகட்சி அடுத்த தேர்தலின் போது இரண்டு எம்.எல்.ஏக்கள் குறைவாகவே வெற்றி பெறுவர்'' என்றார் சுப்ரமணியசுவாமி.


Click it and Unblock the Notifications
