மைத்துனி கொடுத்த பாலியல் புகார்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானதுல்லா கான் ராஜினாமா
டெல்லி: டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆம் ஆத்மியில் தலைவர்கள் மீது பாலியல் புகார் அடுத்தடுத்து பதிவாகி வருகின்றன. டெல்லி வக்பு வாரியத் தலைவராக, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் இருந்தார். இவர் மீது அவரது மைத்துனி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அமானத்துல்லா கான் தன்னுடைய தனிமையில் இருக்குமாறு என்னை வற்புறுத்துகிறார். இதற்காக பல்வேறு விதத்திலும் அவர் எனக்கு நிர்ப்பந்தம் கொடுத்தார். மேலும், அவருடன் சேர்ந்து என் கணவரும் வரதட்சணை வாங்கி வருமாறு என்னை கொடுமைப்படுத்துகிறார்.

அமானத்துல்லாவுடன் இணங்கிச் செல்லுமாறும் வற்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஜாமியா நகர் போலீசார் அமானத்துல்லா கான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் வக்பு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைமை அவருக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த புகார், திட்டமிட்டு நடக்கும் அரசியல் சதி என்று, அமானதுல்லா கான் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், வக்ஃப் வாரியத் தலைவர் மற்றும் எம்எல்ஏ.பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்வதாகவும் அமானதுல்லா அறிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர்கள் பலர், பாலியல் புகார்கள் உள்ளிட்டவற்றில் சிக்கி பதவியை இழந்து வருகின்றனர். சமீபத்தில் பெண்களுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால் அமைச்சர் சந்தீப் குமார் பதவி பறிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications