இதுதான் ஆம் ஆத்மியின் 'ஹிட் லிஸ்ட்'... முழு விவரம்!
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் யாருக்கெல்லாம் குறி வைத்துள்ளோம் என்பதை ஒரு பட்டியலை வெளியிட்டு இன்று முறைப்படி அறிவித்துள்ளது ஆம் ஆத்மி.
இந்தப் பட்டியலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்களை வருகிற தேர்தலில் தோற்கடிக்க தீவிரமாக உழைக்கப் போவதாகவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த விவரம்...

காமன்வெல்த் கல்மாடி
டெல்லி காமன்வெல்த் ஊழல் புகழ் சுரேஷ் கல்மாடி, பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி, சுஷில் குமார் ஷிண்டே, பிரபுல் படேல்.

மீண்டும் பாஜகவுக்கு வந்த எதியூரப்பா
சமீபத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்த எதியூரப்பா, அனந்த் குமார், வீரப்ப மொய்லி.

கெளடா மகன் குமாரசாமி
தேவே கெளடாவின் மகனும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி, சல்மான் குர்ஷித், கமல்நாத்.

மாஜி முதல்வர் மாயாவதி
உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி, முலாயம் சிங் யாதவ், அன்னு டான்டன், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், அனுராக் தாக்கூர், கபில் சிபல், பவன் குமார் பன்சால், நவீன் ஜின்டால்.

பரூக் அப்துல்லா - சரத்பவார் - ராகுல் காந்தி
பரூக் அப்துல்லா, சரத் பவார் மற்றும் ராகுல் காந்தி

இவர்கள் தமிழக தலைவர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஏ.ராசா ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.

அப்ப சோனியா, மோடி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின் பெயர் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.

தோற்கடிக்காமல் விட மாட்டோம்
இந்த பட்டியலில் உள்ள அத்தனை பேரையும் தேர்தலில் தோற்கடிக்க கடுமையாக பாடுபடப் போவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications