ரொம்ப எதிர்பார்க்கிறார்களே மக்கள்.. கேஜ்ரிவாலின் 'முன்ஜாக்கிரதை'ப் பேச்சு!
டெல்லி: டெல்லி மக்களுக்கென பல திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளோம். சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆனால் மக்கள் எங்கள் மீது அதிக அளவில் நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளனர். அதுதான் பயமுறுத்துகிறது என்று கூறியுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போகிறது.
இன்று அக்கட்சியின் முதல்வர் யார் என்பதையும், அரசமைப்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கவுள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்த நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு அதீதமாக இருப்பதாகவும், அது தங்களைப் பயமுறுத்துவதாகவும் திடீரென கூறியுள்ளார் கேஜ்ரிவால்.

மக்களுக்கென நிறைய திட்டங்கள்
டெல்லி மக்களுக்கென பல தொலைநோக்குத் திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான திட்டங்கள் அவை.

பயமுறுத்துகிறது
ஆனாலும் மக்கள் எங்கள் மீ்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதீதமாக நம்பிக்கை வைத்துள்ளனர். இதுதான் பயமுறுத்துகிறது.

முதல்வரை எம்.எல்.ஏக்கள் முடிவு செய்வர்
எங்களது கட்சி சார்பில் யார் முதல்வர் பதவியில் அமர வேண்டும் எனபதை எனது கட்சி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்வர். அவர்களேத் தீர்மானிப்பார்கள் என்றார் கேஜ்ரிவால்.

கருத்துக் கேட்பு முடிந்தது
ஆட்சியமைக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மக்களிடம் கேட்டு முடிவு செய்யப்படும் என்று கேஜ்ரிவால் முன்பு கூறியிருந்தார். அதன்படி கடிதம் மூலமாக, நேரில் என மக்களின் கருத்தை அவர் அறிந்தார். அந்தப் பணிகள் அனைத்தும் முடிந்தது. இதையடுத்து தனது கட்சியின் முடிவை இன்று முறைப்படி அறிவிக்கிறார் கேஜ்ரிவால்.

ஆளுநரை சந்திப்பாரா?
இன்று முற்பகல் செய்தியாளர்களிடம் பேசவுள்ளார் கேஜ்ரிவால். அப்போது தனது கட்சியின் முடிவை அவர் தெரிவிப்பார். அதன் பின்னர் அவர் ஆளுநர் நஜீப் சிங்கைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு வழியின்றி ஆதரவு தரும் காங்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சியமைக்காமல் ஒதுங்கி விட்டது. 2வது இடத்தில் உள்ள ஆம் ஆத்மி ஆட்சியமைக்கிறது. 3வது இடத்தில், வெறும் 8 எம்.எல்.ஏக்களுடன் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஆதரவு தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications