ஆதாயம் தரும் பதவி... 21 ஆம்.ஆத்மி எம்.எல்..ஏ.க்களுக்கு சிக்கல் !
டெல்லி: ஆதாயம் தரும் பதவியின் அடிப்படையில் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம்ஆத்மி பொறுப்பேற்றது முதல் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

இந்த அதிகார போட்டியில், மத்திய அரசின் பிரதிநிதியான டெல்லி ஆளுனர் நஜீப் ஜங்கிற்கு, மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் சட்டபேரவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் இதன் மூலம் அவர்களுக்கு கார் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் டெல்லி சட்டபேரவை விதிகளின்படி எம்எல்ஏக்களுக்கு இது போன்ற நியமனம் அளிக்கக் கூடாது. ஆதாயம் தரும் பதவி வகிக்கும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். இது தெடார்பாக அறிக்கை துணை நிலை ஆளுநரிடம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து 21 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் மொத்தம் உள்ள 70 எம்.எல்.ஏ.க்களின் ஆம் ஆத்மி கட்சிக்கு 67 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் கெஜ்ரிவால் அரசுக்கு ஆபத்தில்லை என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications