இளம் தலை முறையினருக்கு வழிவிட இதுதான் சரியான நேரம்.. அபினவ் பிந்த்ரா !
சண்டிகர்: இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தனது ஓய்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளம் தலைமுறையினருக்கு வழிவிட இதுதான் சரியான தருணம் என தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா வெண்கலப் பதக்கத்தை நூலிழையில் நழுவவிட்டார். இதற்கு பின் பேட்டியளித்த அவர், எனக்கு என்னுடைய வேலை என்ன என்பது நன்றாக தெரியும். அதற்காக அமைதியாக காத்திருந்தேன் என்றார். என்னுடைய எல்லா திறமையையும் பயன்படுத்தினேன். எனக்கு மிகச்சிறப்பான நாளாக அமைந்தது. ஆனால் அதற்கான பலனாக ஒரு பதக்கம் கூட கிடைக்காதது தான் வருத்தம் அளிக்கிறது.

என்னுடைய ஓய்வுக்கு இது சரியான நேரம் இதுதான். இதை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இனிபொழுதுபோக்காக கூட துப்பாக்கியை தூக்க மாட்டேன். ஒலிம்பிக்கில் சாதிக்க என்னால் முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டேன். இப்படி முடிவு கிடைத்ததும் எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அபினவ், ஓய்வு அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் தலைமுறையினருக்கு வழிவிட இதுதான் சரியான நேரம். ஓய்வு பெறுவது குறித்து கடந்த ஆண்டிலேயே முடிவு செய்திருந்தேன். இப்போது அதனை அறிவித்துள்ளேன். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தைத் தவறவிட்டாலும் கடுமையாக போராடினேன். அதனாலேயே நான்காவது இடத்தைப் பெற முடிந்ததது.
ஓய்வுக்கு பின் விளையாட்டு அறிவியல் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட உள்ளேன். இதன்படி வீரர்களின் உடல்தகுதி, மருத்துவம், உயர் திறன் கண்டறிதல் போன்ற பணிகளை செய்யும் நிறுவனத்தை துவங்க இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications