For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியை வாரிச் சுருட்டுகிறது பாஜக.. ஆம் ஆத்மிக்கு "0": ஏபிபி சர்வே!

Google Oneindia Tamil News

Recommended Video

    வட கிழக்கைக் கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி- வீடியோ

    டெல்லி: டெல்லிக்கு நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் வெல்லும் என்று ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது.

    தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. பல்வேறு அரசியல் விவாதங்களை முன்வைத்தும், அடுத்து நடக்க உள்ள தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.

    ABP Survey says who will win?

    இதில் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மாநில வாரியான கருத்துக் கணிப்பை நடத்தியது. ஒடிசாவில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பில் பாஜகவே அதிக இடங்களை பெறும் என்று கூறுகிறது.

    மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பாஜகவுக்கு 13 தொகுதிகள் கிடைக்கும். பிஜு ஜனதா தளத்திற்கு 6 தொகுதிகள்தான் கிடைக்கும். காங்கிரஸ் கட்சி வெறும் இரு தொகுதிகளில் மட்டுமே வெல்லும்.

    பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்குகிறது. பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளை வெல்லும். அதுபோல் பாஜக கூட்டணி வெறும் ஒரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.

    ஹரியானாவில் மொத்தம் 10 இடங்களில் பாஜக கூட்டணி 6 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும் மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெறும்.

    தலைநகர் டெல்லியிலும் பாஜக அலையே பரவி வருகிறதாம். மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக வெல்லுமாம். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதாம்.

    English summary
    ABP Live Survey says that Good news for the BJP from Odisha if 2019 Lok Sabha elections were held today. The saffron party is expected to get 13 seats, BJD 6 and Congress 2.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X