‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
காந்திநகர்: கோடை வெயில் கொளுத்து எடுக்கும் நிலையில் போக்குவரத்து போலீசாருக்காக ‛ஏசி ஹெல்மெட்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை அணிவதன் மூலம் குளிர் காற்று வீசும். இந்த ஹெல்மெட் எப்படி செயல்படுகிறது? பொதுமக்களுக்கு கிடைக்குமா? என்பது பற்றி வாங்க பார்க்கலாம்.
இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் என்பது அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி முதலே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் வெயில் என்பது இயல்பை விட அதிகரித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து ஓரளவு வெயிலின் பிடியில் இருந்து நம்மை பாதுகாத்துள்ளது.

இருப்பினும் பிற மாநிலங்களில் கோடை மழை என்பது பெய்யவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஏப்ரல் மாதமே இந்த நிலை என்றால் வரும் மே மாதத்தை நினைத்து அவர்கள் கவலை பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
பொதுமக்களாகிய நாம் தினமும் வேலை நிமித்தமாக வெயிலில் பயணித்தாலும் கூட குறிப்பிட்ட சில நிமிடங்கள் நம்மால் ஓய்வெடுத்து கொள்ள முடியும். ஆனால் போக்குவரத்து போலீசாரின் நிலைமை என்பது முற்றிலும் வேறுபாடானது. வெயில் கொளுத்தி எடுத்தாலும் கூட அவர்கள் போக்குவரத்தை சரிசெய்வதற்கான பணியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சூழலில் தான் போக்குவரத்து போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இதற்கு குஜராத் மாநிலம் வதோதரா போக்குவரத்து போலீசாரும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் தான் வரும் கோடையை சமாளிக்க வதோதரா போக்குவரத்து போலீசாருக்கு ‛ஏசி ஹெல்மெட்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை அணிவதன் மூலம் அவர்கள் அதிகப்படியான வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இதனால் வதோதராவில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு ‛ஏசி ஹெல்மெட்' வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை அணிந்து தான் தற்போது அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வதோதரா போக்குவரத்து போலீசாருக்கு இந்த வித்தியாசமான ஹெல்மெட்டை உருவாக்கி கொடுத்தது அங்குள்ள ஐஐஎம் மாணவர்கள். இந்த ஹெல்மெட் என்பது பேட்டரியில் இயங்கும். அதாவது பொதுவாக நாம் அணியும் ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான பேன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேனால் தலைக்கு நெ்த பாதிப்பும் ஏற்பாடது.
இந்த பேன் என்பது பேட்டரி மூலம் இயங்கும். ஹெல்மெட்டின் உள்ளே பேன் இருக்கும் நிலையில் அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்வார்கள். பேட்டரிக்கும், ஹெல்மெட்டில் உள்ள பேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும். வெயிலில் இந்த ஹெல்மெட்டை அணிந்து நாம் பணி செய்யும்போது பேட்டரியால் இயங்கும் பேன் மூலம் குளிர்காற்று நமக்கு கிடைக்கும். இது தலையில் வியர்வை தேங்குவதை தடுப்பதோடு, உடல் உஷ்ணமடையவதையும் தடுக்கும்.
மேலும் இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அது அடுத்த 8 மணிநேரம் வரை பயன்பாட்டில் இருக்கும். இதன்மூலம் தினசரி வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தற்போது வரை மொத்தம் 450 போக்ககுவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் வந்தால் மக்களும் பயன்படுத்தி கோடை வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications