டெல்லியில் பிரதமர் மோடி வீடு அருகே துப்பாக்கிச் சூடு...டெல்லி போலீஸ் விசாரணை!
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் திடீரென சுப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையின் 7 ஆம் எண் கொண்ட பங்களா பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகும். சுமார் 12 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இங்கு ஐந்து பங்களாக்கள் உள்ளன. இதே பகுதியில் மோடியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அருகே மீடியாவை சேர்ந்தவர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று மாலை திடீரென துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், டெல்லியில் 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் இருக்கும் பாதுகாவலரின் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக இயங்கியதால் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சுமார் 8.30 மணியளவில் பணியில் இருந்த பாதுகாலர்களின் பணி நேரம் முடிந்து, அடுத்த அணி பாதுகாவலர்கள் பணிக்கு வந்த போது துப்பாக்கிகளும் மாற்றம் செய்துக்கொள்ளப்பட்டதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக 3 முறை துப்பாகி சூடு நடைபெற்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எந்த உயிரச்சேதமும் ஏற்படவில்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இதே ரேஸ்கோர்ஸ் பங்களாவில் சுமார் பத்து ஆண்டுகளாகத் தங்கி இருந்தார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications