ஓடும் பைக்கில் “லிப்-லாக்”.. ஜெய்ப்பூரே “ஜெர்க்” ஆகிருச்சு - இளம் ஜோடிக்கு எதிராக போலீஸ் ஆக்சன்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஓடும் பைக்கில் முத்தமிட்டபடி சென்று கொண்டிருந்த இளம் ஜோடியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. அதில் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் ஆணும், அவருக்கு பின்னால் அமர்ந்து இருக்கும் பெண்ணும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்டே செல்கிறார்கள்.

பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் முக்கிய சாலை ஒன்றில் ஜோடி இவ்வாறு நடந்துகொண்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. சாலையையும் மற்ற வாகனங்களையும் பார்க்காமல் பட்டப் பகலில் அனைவர் மத்தியில் இந்த தம்பதி முத்தமிட்டுக் கொண்டு பைக் ஓட்டிச் சென்றது விபத்துக்கு வழிவகுக்கும் என்று பலர் கருத்திட்டு வந்தார்கள்.
அதில் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதனை அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்த யாரோ வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு இருக்கிறார்கள். அது காட்டுத் தீ போன்று ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிகளவில் பகிரப்பட்டது. இந்த ஜோடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக ஜெய்பூர் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த தம்பதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் மோட்டார் வாகன சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து ஜெய்பூர் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "போக்குவரத்து விதிகளை மீறி ஒருவர் சாலையில் பைக் ஓட்டிச் செல்வதும், வேறு சில செயல்களில் ஈடுபட்டதும் சமூக வலைதளம் மூலம் தெரியவந்தது. அவரது பைக் எண்ணின் அடிப்படையில் உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி கிடைத்து உள்ளது. மோட்டார் வாகன சட்டம் எண் 1988 இன் கீழ் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
இதேபோல் இதற்கு முன்பாக ஹோலி பண்டிகையின்போது ராயல் என்பீல்டு பைக்கில் சென்ற ஆணை பெண் ஒருவர் முன்பக்கம் அமர்ந்து கட்டி அணைத்தபடி சென்று கொண்டு இருந்தார். அந்த வீடியோவும் இதேபோல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து போலீஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications