நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்லுங்கள்.. தூக்கிலிடுங்கள்... இந்து மகாசபை பண்டிட் அசோக் வெறிப் பேச்சு
நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும் என இந்து மகாசபை துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா வெறித்தனமாக பேசியுள்ளார்.
Recommended Video

மீரட்: இந்து தீவிரவாதம் என விமர்சித்ததற்காக நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்லுங்கள் என அகில பாரதீய இந்து மகாசபை அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா வெறித்தனமாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்து தீவிரவாதம் குறித்து வார இதழில் கமல்ஹாசன் எழுதியது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளானது. கமல்ஹாசனை பாஜக தலைவர்கள் மிகக் கடுமையாக தாக்கி வருகின்றனர்.

தீவிரவாதிகளின் ஆதரவாளர்
உத்தரப்பிரதேசத்தில் வாரணாயில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜாவோ, தீவிரவாதிகளின் ஆதரவாளர் கமல்ஹாசன் என சாடியுள்ளார்.

தூக்கிலிடுங்கள்
இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் செய்தியாளர்களிடம் இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரைப் போன்றவர்களை சுட்டுப் படுகொலை செய்ய வேண்டும் அல்லது தூக்கில் போடவேண்டும். அதுதான் அவர்களுக்கு சரியான பாடமாக இருக்கும்.

மரணம்தான் தண்டனை
இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை அவதூறாக பேசுகிற யாருக்கும் இந்த புனித பூமியில் வாழுகிற உரிமையே கிடையாது. அவர்களது விமர்சனங்களுக்கு பிரதிபலன் மரணம் மட்டும்தான். இவ்வாறு பண்டிட் அசோக் ஷர்மா கூறினார்.

மன்னிப்பே கிடையாது
இந்து மகாசபையின் மீரட் பிரிவு தலைவர் அபிஷேக் அகர்வால் கூறுகையில், கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் திரைப்படங்களை இந்து மகாசபையினர் புறக்கணிக்க வேண்டும். இந்துக்களையும் இந்து மதத்தையும் அவமதிக்கும் யாருக்கும் மன்னிப்பே கிடையாது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications