கமல் கட்சி தொடங்க வெளிநாடுகளிருந்து கொட்டப் போகுதாம் துட்டு.. ஜோசியர் பரபர தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு தேவையான நிதிகள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் என்றும் அதுவும் நேர்மையான முறையில் கிடைக்கும் என்றும் டெல்லியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ராடன் பண்டிட் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கான அவரது முயற்சிகள் எடுப்படாது என்றும் தமிழக ஆட்சியாளர்களும், பாஜக நிர்வாகிகளும் அவரை கேலி பேசினர். மக்களுக்கு சேவை செய்யாமல் அரசியலுக்கு வருவது எளிதானது அல்ல என்றும் கடுமையாக விமர்சித்தனர்.

கடந்த 7-ஆம் தேதி அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த சில நிகழ்ச்சிகளில் தான் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் கட்சித் தொடங்குவதற்கான நிதி அனைத்தையும் தொண்டர்களும், ரசிகர்களும் அளிப்பர் என்றும் தெரிவித்திருந்தார்.

 தொண்டர்களிடம் காசு

தொண்டர்களிடம் காசு

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ஜனநாயகத்தின் இறுதி எஜமானவர்கள் மக்கள்தான். கட்தித் தொடங்க ரசிகர்களிடம் கமல் ரூ.30 கோடி கோரியுள்ளார். இது எதனடிப்படையில் என்று தெரியவில்லை. ஆனால் இதுவரை யாரும் தொண்டர்களிடம் காசு வாங்கி கட்சி தொடங்கியதில்லை. இவர்தான் முதல் ஆள் என்று கடுமையாக கிண்டல் செய்து விமர்சித்திருந்தார்.

 கமல் பிறந்தநாளையொட்டி...

கமல் பிறந்தநாளையொட்டி...

நடிகர் கமல் பிறந்தநாளையொட்டி கடந்த 6-ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த தமிழ் தெரிந்த ஜோதிடர் ராடன் பண்டிட் என்பவர் தனது யூடியூப் சேனலில் கமல் குறித்த சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் கமலின் குணாதிசயங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

 புத்திசாலி, அறிவாளி

புத்திசாலி, அறிவாளி

கமல் குறித்து ஜோதிடர் கூறுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப சினிமா நட்சத்திரங்களில் அடுத்த அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து ஆராய்ந்தேன். அப்போது கமலின் ஜாதகத்தை பார்த்தேன். அவர் நல்ல நிர்வாகி, சொல்வதைதான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார். பிடிவாதம் குணம் உள்ளவர். இவரது ஜாதகம் யோக ஜாதகம்.

 அரசியல் எதிர்காலம்

அரசியல் எதிர்காலம்

இவருக்கு 20 ஆண்டுகளுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. அரசியலுக்கு வருவதற்கு யோசிப்பார், ஆனால் நிச்சயம் அரசியலுக்கு வருவார். கடுமையான போராளி. தோல்வி அடைந்தால் அதிலிருந்து மீண்டு வந்து வெற்றியை காண்பார். அடுத்து தேர்தல் வந்தாலும் ஸ்டாலினை விட சிறப்பான இடத்துக்கு வந்து முதல்வர் ஆவார். இல்லாவிட்டால் அதற்கடுத்த ஆண்டிலாவது முதல்வர் ஆவார். திமுகவுக்கு பலமான டஃப் கொடுப்பார்.

நிதி கிடைக்கும்

அவர் கட்சித் தொடங்குவதற்கு நிதி எங்கே என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அவர் கட்சித் தொடங்கினால் அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து நிதி கிடைக்கும். அதுவும் நியாயமான பொருளாதார விருத்தி இருக்கும் என்றார் ராடன் பண்டிட்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi based Tamil Astrologer says that Kamal will get fund from world countries but in a genuine way for starting political party.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற