காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவே கூடாது... ரஜினி நண்பர் அம்பரீஷ் கடிதம்!
காவிரியில் இருந்து எந்த காரணத்திற்காகவும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று நடிகரும் எம்எஎல்ஏவுமான அம்பரீஷ் கர்நாடக மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு : காவிரியில் இருந்து எந்த காரணத்தை கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்றும் தமிழக முதல்வரின் கோரிக்கையை பொருட்படுத்த வேண்டாம் என்றும் நடிகரும், எம்எல்ஏவுமான அம்பரீஷ் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அம்பரீஷ் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எக்காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது. கடிதத்தில் தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்கும்படியும் சித்தராமையாவை கேட்டுக் கொண்டுள்ள அம்பரீஷ், இதற்கு போதிய ஆதரவை தாமும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்க தயார் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என முதல்வர் சித்தராமையாவின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.
கர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என அவர் வினவியுள்ளார். எனவே அணைகளில் இருக்கும் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்துமாறு சித்தராமையாவை அம்பரீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழக மக்களுக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று அந்த மாநில முதல்வருக்கு வலியுறுத்தியுள்ள அம்பரீஷ் தமிழக அரசியல் களம் காணப் போவதாகவும், பிரச்னைகளைத் தீர்க்கப் போவதாகவும் சொல்லும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் எனவும் அம்பரீஷ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்கும்படியும் சித்தராமையாவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சித்தராமையா முடிவுக்கு வரவேற்பு
இதற்கு போதிய ஆதரவை தாமும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்க தயார் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என முதல்வர் சித்தராமையாவின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.

தமிழகத்திற்கு எப்படி தர முடியும்
கர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என அவர் வினவியுள்ளார். எனவே அணைகளில் இருக்கும் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்துமாறு சித்தராமையாவை அம்பரீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினியின் நண்பர் அம்பரீஷ்
காவிரியில் இருந்து தமிழக மக்களுக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று அந்த மாநில முதல்வருக்கு வலியுறுத்தியுள்ள அம்பரீஷ் யார் தெரியுமா? தமிழக அரசியல் களம் காணப் போவதாகவும், பிரச்னைகளைத் தீர்க்கப் போவதாகவும் சொல்லும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications