காமெடி நடிகர் வீட்டில் ரூ 2000 நோட்டு குவியல்.. போட்டு கொடுத்த வாரிசு நடிகர்.. கடைசியில் ட்விஸ்ட்
ஹைதராபாத்: காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டில் குவியல் குவியலாக ரூ 2000 நோட்டுகள் என நடிகர் விஷ்ணு மஞ்சு வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதில் ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பணபுழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க புதிய ரூ 500, ரூ 2000, ரூ 200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

அது போல் 89 சதவீத ரூ 2000 நோட்டுகள் 2016 இல் புழக்கத்தில் விட்டதை அடுத்து 2018-2019 ஆம் ஆண்டு முதல் ரூ 2000 நோட்டுகள் அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்திவிட்டது.
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு பிரச்சினைகள் குறைந்ததாலும் இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இருப்பதாலும் ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது.
இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் சாமானியர்களை பொருத்தமட்டில் ரூ 2000 அந்த அளவுக்கு புழக்கத்தில் இல்லை என கூறப்படுகிறது. அப்படியும் ஏதோ ஒன்றிரண்டு வைத்திருந்தாலும் அவற்றை பெட்ரோல் பங்கிலோ அல்லது பெரிய வியாபார நிறுவனங்களிலோ மாற்றிக் கொள்ளலாம் என முடிவில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் வெண்ணிலா கிஷோரின் வீட்டில் குவியல் குவியலாக ரூ 2000 நோட்டுகள் உள்ளதாக ஒரு புகைப்படத்தை நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு வெளியிட்டிருந்தார். அதில் ரூ 2000 நோட்டுகள் குவியல் குவியலாக இருக்கும் புகைப்படம் வெண்ணிலா கிஷோர் வீட்டில் எடுக்கப்பட்டது. இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்வார் என ஆச்சரியமாக இருக்கிறது என அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
அதாவது ஒரு நாளைக்கு ரூ 20000 மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் எனும் நிலையில் இவ்வளவு நோட்டுகளை அவர் எப்படி மாற்றுவார் என பொதுமக்களும் யோசிக்கத் தொடங்கினர். சிலர் இவ்வளவு பணக்குவியலா சான்ஸே இல்லை என கூறி விஷ்ணு மஞ்சுவின் ட்வீட்டை நம்ப மறுத்தனர். ஆனால் இன்னும் சிலர் இவருக்கு எப்படி இத்தனை பணம் வந்தது, புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

விஷயம் தீவிரமானதை உணர்ந்த விஷ்ணு மஞ்சு மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அந்த பணக்குவியல் புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் வெண்ணிலா கிஷோர் வீட்டில் பணக்குவியல் என போட்ட காமெடியான ட்வீட்டை பல செய்தி சேனல்கள் வெளியிட்டுள்ளன.
எனக்கும் கிஷோருக்கும் இடையே எப்போதும் ஜாலியான வம்பு சண்டைகள் இருக்கும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். நான் அவரை சீண்டி விளையாடுவதும் அவர் என்னிடம் விளையாட்டு காட்டுவதும் வழக்கம்தான். காமெடியை காமெடியாக பார்க்கும் குணம் கொண்டவர்கள் நிச்சயம் இதை ஜோக்காகவே எடுத்திருந்திருப்பர். இது ஜோக் என்பதை புரியாமல் கிஷோர் வீட்டில் இத்தனை பணக்கட்டுக்களா என நினைப்பவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications