ஜெயா டிவியில் சீரியல் பார்க்க சொன்ன நடிகை.. கன்னடர்கள் கொந்தளிப்பு.. எடியூரப்பா விசாரணை
பெங்களூர்: ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் 'அண்ணி' சீரியலை பார்க்க சொல்லி டிவிட் போட்ட நடிகை மாளவிகா அவினாஷுக்கு கன்னடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று பாஜக தலைவர் எடியூரப்பாவே பேட்டி கொடுக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.
தமிழ் திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ளவர் மாளவிகா அவினாஷ். கர்நாடகா அவரது சொந்த மாநிலம். கர்நாடக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் பதவியிலும் உள்ளார்.

இந்நிலையில் மாளவிகா ஒரு டிவிட் வெளியிட்டார். அதில், நான் இவ்வளவு புகழ் பெற காரணம், தமிழில் நடித்த 'அண்ணி' சீரியல்தான். அந்த சீரியலை அம்மா ஜெயலலிதா தவறாமல் பார்ப்பாராம். ஒருநாள் பார்க்க முடியவில்லை என்றாலும், சிறப்பு ஏற்பாடு செய்து அதை பார்ப்பாராம். அப்படிப்பட்ட சீரியல் தற்போது ஜெயா டிவியில் மதியம் 1.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது. நீங்களும் காணத் தவறாதீர்கள். இவ்வாறு மாளவிகா கூறியிருந்தார்.
ஆனால், இந்த டிவிட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட நெட்டிசன்கள் டிவிட்டரில் வசைபாட ஆரம்பித்துவிட்டனர். காவிரி நதிநீர் பிரச்சினை இருப்பதால் தமிழ் டிவி சேனல் பற்றி பேசுவது கூற தப்பு என அவர்கள் வாதம் செய்தனர். ஜெயலலிதாவை அம்மா என குறிப்பிட்டதும் அவர்களுக்கு கோபமாம்.
இதையடுத்து அந்த டிவிட்டை டெலிட் செய்துள்ளார், மாளவிகா. இன்று மாலை வெளியிட்ட ஒரு டிவிட்டில், கன்னடர்களை வருத்தப்படுத்த நான் டிவிட் செய்யவில்லை. ஒரு நடிகை என்ற வகையில் டிவிட் செய்தேன் என விளக்கம் அளித்துள்ளார், மாளவிகா.
இதனிடையே, இந்த விவகாரம், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா வரை சென்றுவிட்டது. நிருபர்கள் இக்கேள்வியை எழுப்பியபோது, மாளவிகாவை நேரில் அழைத்து விசாரிக்கிறேன் என்றும், அவர் இப்படி செய்திருக்க கூடாது என்றும், எடியூரப்பா பேட்டியளித்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்துதான் கன்னட திரையுலகம் கல்லா கட்டிக்கொண்டுள்ளது. இப்போது கூட கோலி சோடா திரைப்படம் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஓடிக்கொண்டுள்ளது. மறுபக்கமோ இப்படியும் துவேஷம் தொடருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications