என்னாது பாஜகவா, ஆளை விடுங்க.. 7 மாதத்துக்கு முன் கட்சியில் இணைந்த நடிகை.. திடீர் விலகல்.. என்னாச்சு?
வங்க நடிகை பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
கொல்கத்தா: பாஜகவில் 7 மாதத்துக்கு முன்புதான் இணைந்தார் பிரபல வங்காள சினிமா நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி.. ஆனால், இப்போது அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்..
வங்காளத்தில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி.. இவர் பாஜகவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இணைந்தார்.. கொல்கத்தாவில் பாஜக அம்மாநில தலைவர் தீலிப், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாசு விஜயவர்கியா முன்னிலையில் நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜகவுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்ரபந்தி.. இதை தொடர்ந்து மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் பாஜக வாய்ப்பு வழங்கியது.

பதில்
ஆனால், இன்று திடீரென பாஜகவில் இருந்து விலக போகிறேன் என்று அறிவித்துள்ளார்.. இதுகுறித்து ஸ்ரபந்தி சாட்டர்ஜி ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவுடன் அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்கிறேன்... கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக போராடினேன்... ஆனாலும், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பாஜக எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை" என்று அதிருப்தியை தன்னுடைய ட்விட்டில் வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சி
இது பாஜகவுக்கு மட்டுமல்லாமல், அவரது 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. உண்மையிலேயே விலகலுக்கு இதுதான காரணமா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்று தெரியவில்லை.. வழக்கமாக மாற்று கட்சியில் உள்ளவர்களை தன் பக்கம் இழுப்பதுதான் பாஜகவின் தந்திரம்.. அப்படித்தான் மேற்கு வங்க தேர்தல்களில் பாஜக நடந்து கொண்டுள்ளது.. இதையும் முறியடித்துதான் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று முன்னேறி கொண்டே வருகிறார்.

மம்தா
ஆனால், பாஜகவை விட்டு ஒரு புகழ்பெற்ற நடிகை வெளியேறி உள்ளது, பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸில் சேரப்போகிறாரா? மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியில் இணைந்து ஏதாவது பங்காற்ற போகிறாரா? என்று தெரியவில்லை.. மம்தா கட்சியில் சேர திட்டம் உள்ளதாக என்று கேட்டதற்கு "காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்கிறார்.. அப்படியானால் அந்த தகவலை ஸ்ரபந்தி மறுக்கவில்லை என்றே தெரிகிறது.

தேர்தல்
ஏற்கனவே பாஜகவின் துணை தலைவராக இருந்த முகுல் ராய் உட்பட பல அரசியல்வாதிகள், மண்ணை கவ்விய நிலையில், அதிருப்தியில் உள்ளனர்.. கட்சியை விட்டும் வெளியேறினர்... பாபுல் சுப்ரியோ உட்பட, பிஸ்வஜித் தாஸ், தன்மோய் கோஷ், சவுமென் ராய் போன்றோர் அனைவருமே அதிருப்திக்கு ஆளானவர்கள்தான்.. சமீப காலமாக 3 எம்எல்ஏக்கள், திரிணாமுல் கட்சிக்கும் தாவி உள்ளனர்.. அந்த வகையில் ஸ்ரபந்தியும் சேர போகிறாரா என்று தெரியவில்லை.. ஆனால், இன்னும் சில மாதங்களில் வங்காள சட்டமன்ற தேர்தல் வர போகிறது..

பாஜகவுக்கு செக்?
பாஜகவுக்கு ஏற்கனவே 200 இடங்களை டார்கெட் செய்து, கடைசியில் 77 இடங்களை மட்டுமே பெற்றது.. அதனால்தான் வரப்போகும் தேர்தலில் வெற்றியை பெறுவதற்காக, பலரையும் தங்கள் கட்சியில் இழுக்கும் முயற்சியை மேற்கொண்டது.. திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் என பலதரப்பினரும் ஒட்டுமொத்தமாக பாஜகவிலும் இணைந்தனர். பாஜக இவ்வளவு செய்தும், சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது. இனி வரப்போகும் தேர்தலில் என்ன செய்ய போகுமோ தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு












Click it and Unblock the Notifications