வைப்ரன்ட் குஜராத் 2026 மாநாடு: கட்ச்சில் ₹1.5 லட்சம் கோடி முதலீட்டை அறிவித்த அதானி குழுமம்!
காந்தி நகர்: இந்திய வளர்ச்சிக்குக் குஜராத்தின் முக்கிய பங்கை எடுத்துக் காட்டும் வகையில் வைப்ரண்ட் குஜராத் சர்வதேச உச்சி மாநாடு 2026 நடைபெற்றது. மாநிலத்தின் தொழில், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிப் பயணத்தில் அதானி குழுமம் தனது ஆழமான அர்ப்பணிப்பை இம்மாநாட்டில் உறுதிப்படுத்தியது.
இந்த மாநாட்டில் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல லிமிடெட்டின் (APSEZ) நிர்வாக இயக்குநர் கரண் அதானி உரையாற்றினார். தொலைநோக்குப் பார்வை, நிலையான நிர்வாகம், பெரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றால் குஜராத் மற்றும் இந்தியா உலக முதலீட்டுக்குக் கவர்ச்சியான இடங்களாக மாறியுள்ளதாகக் கூறினார்.

அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதே குஜராத் தான் எனக் குறிப்பிட்ட அவர், ஆரம்பம் முதலே தங்கள் குழுமத்தின் வளர்ச்சிக்குக் குஜராத் மாநிலமே மையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இன்று நாட்டின் முன்னணி உள்கட்டமைப்பு, எரிசக்தி நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுப்பதிலும் குஜராத்திற்கு முக்கிய பங்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதானி
கட்ச்சில் உள்ள முந்திராவை அதானி குழுமத்தின் "கர்ம பூமி" என கரண் அதானி விவரித்தார். இது இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகத் துறைமுகமாகவும், முழு ஒருங்கிணைந்த பல்திறன் தளவாட மையமாகவும் வளர்ந்துள்ளது. தற்போது தளவாடங்கள், உற்பத்தி, எரிசக்தித் துறைகளில் முக்கிய வசதிகளைக் கொண்ட தொழில்துறை சூழலியல் அமைப்பாகவும் முந்திரா உருவெடுத்துள்ளது.
கட்ச்சில் உருவாகும் காவ்டா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் 37 ஜிகாவாட் திறனுடன் உலகின் மிகப் பெரிய பூங்காவாக உருவாகி வருகிறது. இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி, எரிசக்தி பாதுகாப்பு இரண்டின் சின்னமாக இருக்கும். இந்தத் திட்டங்கள் எப்படி வளர்ச்சி, நிலைத்தன்மை, காலநிலை பொறுப்பு ஆகியவை ஒருங்கிணைந்து செல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் என்றார் கரண் அதானி.
மிக பெரிய முதலீடு
குஜராத்தின் வளர்ச்சிப் பாதையில் நம்பிக்கையுடன், அதானி குழுமம் அடுத்த ஐந்தாண்டுகளில் கட்ச் பிராந்தியத்தில் ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம், துறைமுகம் மற்றும் தளவாட உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல், தொழில்துறை வளர்ச்சி ஆகியவையே இதன் முக்கிய இலக்குகளாக இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் முந்திரா துறைமுகத்தின் திறனை இரட்டிப்பாக்கவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்திய வர்த்தகம் மற்றும் தளவாடத் திறன்களை இது வலுப்படுத்தும்.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
அதானி குழுமத்தின் ஒவ்வொரு முதலீடும் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் போட்டித்தன்மை, நிலைத்தன்மை, நீண்டகால ஸ்திரத்தன்மை போன்ற இந்தியாவின் தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துப் போவதாகக் கரண் அதானி கூறினார். கொள்கை நிலைத்தன்மையும், கூட்டாட்சியுமே தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியில் குஜராத் தொடர்ந்து நாட்டின் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றும் கரண் அதானி மேலும் தெரிவித்தார்.
#WATCH | Rajkot, Gujarat | At the Vibrant Gujarat Regional Conference, Karan Adani, MD of Adani Ports & Special Economic Zone Ltd, says, "... As Prime Minister, you have taken this philosophy across India. Through cooperative and competitive federalism, states have become engine… pic.twitter.com/h25ZyiW7Np
— ANI (@ANI) January 11, 2026
விக்சித் பாரத் 2047
விக்சித் பாரத் 2047 இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் அதானி குழுமம் நம்பிக்கைக்குரிய நிறுவனமாகச் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.. குஜராத்தை மையமாகக் கொண்டு, வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட சர்வதேச அளவில் மதிக்கப்படும் இந்தியாவை உருவாக்க அதானி குழுமம் இலக்கு கொண்டுள்ளது.
வைப்ரண்ட் குஜராத் மாநாடு, நிலையான முதலீடுகள், அமைப்புகளின் பலம், அரசு-தனியார் ஒத்துழைப்பு ஆகியவை இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications