சூரியனை ஆராய புறப்பட்ட ஆதித்யா எல் 1.. சூலூர்பேட்டை செங்காளம்மாவிடம் வேண்டிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்
திருப்பதி: ஆதித்யா எல்1 மிசன் வெற்றி பெற வேண்டி சூலூர்பேட்டை செங்காளம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை செய்தார். ஆதித்யா எல்1க்குப் பிறகு, எங்களின் அடுத்த வெளியீடு ககன்யான் திட்டம் என்றும் கூறியுள்ளார் சோம்நாத்
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலத்தை சுமந்து கொண்டு PSLV-C57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. எல்லோர் கண்களும் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி குவிந்துள்ளன. சந்திரயான் 3 வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படுகிறது.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. நிலவில் இருந்து பல்வேறு தகவல்களை பிரக்யான் ரோவர் அனுப்பி வருகிறது. சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பவுள்ளது. இதற்கான ஒத்திகை ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ளது
ஆதித்யா எல் 1 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இறைவனையும் வேண்டிக்கொண்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றைய தினம் விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதே போல ஆதித்யா எல்1 திட்டம் தொடர்பாக சூலூர்பேட்டை செங்காளம்மா பரமேஸ்வரி கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சிறப்பு பூஜை நடத்தினார். பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மாதிரியை சிறப்பு பூஜையில் வைத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், ஆதித்யா எல்1 இன் கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது சனிக்கிழமை காலை 11.50 மணியளவில் விண்ணில் ஏவப்படும். ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் நமது சூரியனை ஆய்வு செய்வதற்காக உள்ளது. இது எல்1 புள்ளியை அடைய இன்னும் 125 நாட்கள் ஆகும். இது மிகவும் முக்கியமான ஏவுதல். சந்திராயன்-4 குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை; விரைவில் அறிவிப்போம்.
ஆதித்யா எல்1க்குப் பிறகு, எங்களின் அடுத்த வெளியீடு ககன்யான், இது அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும். ஆதித்யா 15 லட்சம் கி.மீ. தொலைவில் லாங்ரேஜியன் பாயின்ட்1 சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படும் என கூறினார். மேலும், சந்திரயான் -3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications