Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்ணில் பாய்ந்த ஆதித்யா-L1.. ஸ்ரீஹரிகோட்டாவில் கொண்டாட்டம்.. உற்சாகமாக தேசியக்கொடியசைத்த மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா-L1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனை ஏராளமானோர் நேரில் பார்த்து கை தட்டி ஆரவாரம் செய்தனர். பள்ளிகளில் நேரலையில் பார்த்து ரசித்த மாணவர்கள் தேசியக்கொடியசைத்து கொண்டாடினர்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் மலைத்துப்போகின்றனர். இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள 'லக்ராஞ்சியன் புள்ளி எல்-1' என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

Aditya L1 launch today People throng Sriharikota Satish Dhawan Space Center

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும்.

எல் 1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் ஆய்வகம் வைக்கப்படுவதால் எந்த தடையும் இல்லாமல் சூரியனைத் தொடர்ந்து பார்க்கும் முக்கிய நன்மை கிடைக்கும். சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது. நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள், லாக்ரேஞ்ச் புள்ளி L1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aditya L1 launch today People throng Sriharikota Satish Dhawan Space Center

ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதை நேரில் காண்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் ஏராளமானோர் காலை முதலே குவிந்தனர். ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று இதற்காக முன்பதிவு தொடங்கிய நிலையில் 7 நிமிடங்களில் 10000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சந்திரயான் 3 வெற்றியை அடுத்து இஸ்ரோவின் அடுத்தடுத்த சாதனைகளை நேரில் காண மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆதித்யா எல் 1 விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனை ஏராளமானோர் நேரில் பார்த்து கை தட்டி ஆரவாரம் செய்தனர். தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவும் நிகழ்ச்சியை நேரலையில் பார்த்து ரசித்தனர். பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த போது பள்ளிகளில் நேரலையில் பார்த்த மாணவர்கள் தேசியக்கொடியசைத்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+