காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வது முடிவல்ல.. தம்பிதுரை அடடே விளக்கம்
காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வது முடிவல்ல என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வது முடிவல்ல என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தொடர்ந்து போராடுவோம் என அவர் கூறினார். இந்த போராட்டம் வெற்றி பெறும் என தம்பிதுரை கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வது முடிவல்ல என்றும் அவர் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை 21 நாட்களாக முடக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications