மோடி சர்க்காரில் மொத்தம் 20 'கிரிமினல்' அமைச்சர்கள்! 59 கோடீஸ்வரர்கள்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 66 பேரில் 20 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்பவர்கள்; 59 பேர் கோடீஸ்வரர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.
மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமையன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களாக 21 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த 21 பேரில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ADR). இது பற்றிய அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரம்:
- கடந்த மே மாதம் 45 அமைச்சர்களுடன் மோடி அமைச்சரவை பதவியேற்றது. இதில் 12 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
- ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
- 21 புதிய அமைச்சர்களில் 4 பேர் மீது மிகவும் கடுமையான கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
- ஒட்டுமொத்தமாக மொத்தம் 11 அமைச்சர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன.
- ஆக்ரா தொகுதி எம்.பியான அமைச்சர் ராம்சங்கர் கதேரியா மீது மட்டும் 21 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
- ராம்சங்கர் கதேரியா மீது பலாத்கார முயற்சி, மதநல்லிணக்கத்தை சீர்குலைத்தல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மத்திய அமைச்சர்கள் ஹன்ஸ்ராஜ் மீது 11, பண்டாரு தத்தாத்ரேயா மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- சாத்வி நிரஞ்சன் ஜோதி, கிரிராஜ்சிங் ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன.
- அமைச்சர்கள் ராம்கிருபால் யாதவ், ராஜிவ் பிரதாப் ரூடி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மீது தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
- மத்திய அமைச்சர்களில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையும் 40-ல் இருந்து 59 ஆக அதிகரித்துள்ளது.
- அதாவது மத்திய அமைச்சர்களில் 92% பேர் கோடீஸ்வரர்கள்.
- புதிய அமைச்சர்களில் ஒய்.எஸ். சவுத்ரி (ஆந்திரா)தான் ரூ189.69 கோடி சொத்து மதிப்புடையவர்.
- சவுத்ரிக்கு அடுத்ததாக ஜெயந்த் சின்ஹா ரூ55.67 கோடி, மகேஷ் சர்மா ரூ 47.37 கோடி சொத்துகளை வைத்துள்ளனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications