குஜராத்தில் அத்வானி; நரேந்திர மோடியுடன் சந்திப்பு!
அகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அத்வானி இன்று அம்மாநிலத்துக்கு சென்றார்.
குஜராத் வந்த அத்வானி, நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்துப் பேசினார். குஜராத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக குஜராத் வரும் அத்வானிக்கு அனைத்து இடங்களிலும் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மோடி உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும் நரேந்திர மோடியை லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமித்த போது, பிரதமர் வேட்பாளராக அறிவித்த போதும் கடுமையாக அத்வானி எதிர்த்தார். அதனால் டெல்லியில் அத்வானி வீட்டு முன்பு மோடி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் போபால் பொதுக் கூட்டத்தில் அத்வானியின் காலைத் தொட்டு மோடி ஆசீர்வாதம் பெற்ற போதும் கூட அவரை கண்டுகொள்ளாமல் அத்வானி இருந்தார். அதனால் குஜராத் பாஜகவினர் தற்போது அத்வானியை அதிருப்தியுடன்தான் வரவேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!










Click it and Unblock the Notifications