பாரு பாரு நல்லாப் பாரு.. ஏரோ இந்தியா ஷோவைப் பாரு.. விதம் விதமான விமானம் பாரு!
பெங்களூர்: பெங்களூரில் வருடாந்திர விமான கண்காட்சி இன்று காலை துவங்கியது.
பெங்களூரில் ஆண்டுதோறும் விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கண்காட்சியை ஏலஹன்காவில் உள்ள விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை துவக்கி வைத்தார்.
விழாவை துவக்கி வைத்த அவர் உரை நிகழ்த்தினார்.

5 நாட்கள்
இன்று துவங்கியுள்ள விமான கண்காட்சி வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும்.

பல நாடுகள்
விமான கண்காட்சியில் பல நாடுகளைச் சேர்ந்த 54 அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

600 நிறுவனங்கள்
கண்காட்சியில் 600 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அதில் 295 இந்திய நிறுவனங்களும், 328 வெளிநாட்டு நிறுவனங்களும் அடக்கம்.

அமைச்சர் ரூடி
மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி விமானம் ஓட்டும் உரிமம் பெற்றுள்ளவர். அவர் கண்காட்சியின்போது விமானம் ஒன்றை இயக்க உள்ளார்.

பெங்களூர்
இந்த விமான கண்காட்சி லட்சக்கணக்கான பெங்களூர்வாசிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைய உள்ளது.

பார்வையாளர்கள்
பன்னாட்டு விமானங்கள் கலந்து கொள்ளும் இந்த கண்காட்சியை 3.5 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய கண்காட்சி
ஏலஹன்காவில் நடக்கும் இது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி ஆகும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேஜாஸ்
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இலகுரக விமானமான தேதாஸ் இந்த விமான கண்காட்சியில் பங்கேற்கிறது.


Click it and Unblock the Notifications
