இரவோடு இரவாக.. மெஹ்பூபா முஃப்தி உள்பட பலருக்கு வீட்டு சிறை! பரபரக்கும் ஜம்மு காஷ்மீர்.. என்னாச்சு?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்து இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது.
ஜம்மு காஷ்மீரில் மதம் சார்ந்த விழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சினிமா தியேட்டர்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை திரும்பியுள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில்தான் தற்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இன்று நான் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறேன். இதேபோல எங்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்தும் நேற்று நள்ளிரவில் நடந்தது. மத்திய அரசு இங்கு இயல்பு நிலை இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த கைது நடவடிக்கை மத்திய அரசின் செயலை அம்பலப்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர் முழுவதும் சட்ட விரோதமாக 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை காஷ்மீர் மக்கள் 'கொண்டாட வேண்டும்' என்று பிரமாண்ட விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மக்களின் உண்மையான உணர்வுகளை ஒடுக்க மிருகத்தனமான சக்தி பயன்படுத்தப்படுகிறது. தற்போது இது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு வந்திருக்கும் நிலையில், நீதிமன்றம் இந்த சம்பவங்களை கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் 4ம் ஆண்டு தினத்தை அனுசரிக்கும் வகையில் அமைதியான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சிகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால் அனுமதி மறுத்ததாகவும் அதன் பின்னர்தான் கைது நடவடிக்கைகள் தொடங்கியதாகவும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் தங்களது அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications