மோடியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீங்க? செய்தியாளரை காய்ச்சிய சோம்நாத் பார்தி

டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி தலைமையில் சென்ற ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சில ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி, டெல்லி மாநில பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங், சோம்நாத் பார்திக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார்.
ஆனால், சோம்நாத் பார்தி டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார். இருப்பினும் அமைச்சரின் அங்கீகார கடிதம் இல்லாமல் வழக்கறிஞர் ஆஜராகுவதற்கு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் ஆணைய தலைவர் பர்கா சிங்குக்கும், சட்ட அமைச்சரின் வழக்கறிஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில்,சோம்நாத் பார்தியிடம் இன்று டெல்லி செய்தியாளர்கள் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பொறுமையை இழந்த அவர், பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு இதுபோன்று நீங்கள் என்னிடம் கேள்வி எழுப்புகிறீர்கள்.. மோடியிடம் இருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் செய்தியாளர்கள் கொந்தளித்தனர். பின்னர் சோம்நாத் மன்னிப்பு கேட்க சர்ச்சை முடிவுக்கு வந்தது.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications