For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் வாக்களிக்க தடை விதிக்கணும்: விஹெச்பி தலைவர்

By Siva
Google Oneindia Tamil News

காசியாபாத்: நீதிபதி மார்கண்டேய கட்ஜூவை அடுத்து விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சியும மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்களின் உளவாளி(பிரிட்டிஷ் ஏஜெண்ட்) என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி உத்தர பிரதேச மாநிலம் காசியபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

பகத் சிங்

பகத் சிங்

பகத் சிங், சந்திர சேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் முயற்சியால் மட்டுமே இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது.

காந்தி

காந்தி

சுதந்திரம் பெற காந்திய வழி போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் பயனில்லாதவை. காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட். பிஸ்மில் தூக்கிலிடப்பட்டபோது காந்தி ராட்டையை சுற்றிக் கொண்டிருந்தார்.

ராமர் கோவில்

ராமர் கோவில்

ஏற்கனவே அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை விஸ்வ இந்து பரிஷத் மீண்டும் கட்டும். பாரத மாதா வாழ்க, வந்தேமாதரம் என்று கூற முடியாதவர்கள், மாடுகளை கொல்பவர்கள், நம் மூவர்ணக் கொடியை அவமதிப்பவர்கள் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்கள்.

ஓட்டு

ஓட்டு

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டவர்கள் வாக்களிக்க தடைவிதிக்க வேண்டும் என்றார் பிராச்சி. இப்படி ஏதாவது கூறி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிராச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Controversial VHP leader Sadhvi Prachi today sparked another controversy as she alleged that Mahatma Gandhi was a "British agent" and his contribution towards independence of the country was "negligible", days after former PCI chairman Markandey Katju levelled same allegation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X