கொல்கத்தாவில் இன்று இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கும் போராட்டம்
கொல்கத்தா: கேரளாவை அடுத்து கொல்கத்தாவில் இன்று இளைஞர்கள் முத்தப் போராட்டம் நடத்த உள்ளனர்.
கேரளாவில் ஒரு காபி கடையில் ஆண்களும், பெண்களும் அநாகரீகமாக நடந்து கொள்வதாகக் கூறி பாஜக இளைஞர் அணியினர் அந்த கடையை சேதப்படுத்தினர். இதை கண்டித்து சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் அமைப்பு கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை முத்த போராட்டம் நடத்தியது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று முத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சிலர் தானாக வந்து இளம் ஜோடிகளை தாக்குவதை கண்டித்து இந்த போராட்டம் நடத்துகிறோம். இதில் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மாணவர் நபோத்தமா பால் தெரிவித்தார்.
இது குறித்து பால் மேலும் கூறுகையில்,
மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து சென்று பின்னர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து போராடுவார்கள். அதன் பிறகு அவர்கள் பல்கலைக்கழகம் எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று போராடுவார்கள் என்றார்.
இதே போன்று பிரெசிடென்சி பல்கலைக்கழக மாணவர்களும் முத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications