ராகுலுக்கு தில் இருந்தால் என்னை சிறையில் அடைக்கட்டும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
அமேதி: காங்கிரஸ் துணை தலைவர் ராஜீவ் காந்திக்கு துணிச்சல் இருந்தால் என்னை சிறைக்கு அனுப்பி வைக்கட்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராஜீவ் காந்தி பெயரிலான அறக்கட்டளை அமேதி தொகுதி விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார். இதையடுத்து காங்கிரஸ் அவருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி வைத்தது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஸ்மிருதி கூறுகையில்,

நான் அமேதி வருவது சிலருக்கு சங்கடமாக உள்ளது. நோட்டீஸ் அனுப்பினால் எல்லாம் நான் பயந்துவிட மாட்டேன். இந்த நாட்டின் பெண்கள் பலகீனமானவர்கள் என்று காங்கிரஸ் அல்லது ராகுல் நினைத்தால் அது தவறு. இதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். அமேதிக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
ராகுலுக்கோ, காங்கிரஸுக்கோ துணிச்சல் இருந்தால் என்னை சிறையில் அடைக்கட்டும். நான் அமைதியாக இருக்க மாட்டேன். தேர்தலை மனதில் வைத்து நான் அமேதியை ஆதரிக்கவில்லை.
நான் ஒரு மீட்டிங்கில் பிசியாக இருந்தபோது வழக்கறிஞர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அமேதியில் ராகுல் காந்தி அல்லது நேரு-காந்தி குடும்பத்திற்கு எதிராக நான் ஏதாவது பேசினால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி நோட்டீஸ் ஒன்றை என்னிடம் அளித்தார் என்றார்.












Click it and Unblock the Notifications