நிலாவுக்கு ரோவர் அனுப்பும் இந்தியா!
பெங்களூர்: செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெற்றிகரமாக சென்று சாதனை படைத்த சந்தோஷத்தில் உள்ள இந்தியர்களுக்கு இன்னொரு சந்தோஷத்தைக் கொடுக்க தயாராகி வருகிறது டீம் இன்டஸ் (Team Indus) என்ற தனியார் அமைப்பு.
பெங்களூரைச் சேர்ந்த இந்த தனியார் அமைப்பு நிலவுக்கு ரோவர் விண்கலம் ஒன்றை அனுப்பும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 50 இளம் விஞ்ஞானிகள் அடங்கிய இந்த இளம் குழு படு மும்முரமாக பெங்களூரில் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
புரோட்டோ டைப் மாடலை ரெடி செய்து விட்ட இந்த குழு, தற்போது இறுதிக் கட்டத்திற்கு முந்தைய மாடலை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

லூனார் எக்ஸ்பிரைஸ் போட்டி...
கூகுள் நிறுவனம் நடத்தும் லூனார் எக்ஸ்பிரைஸ் என்ற போட்டியின் ஒரு பகுதியாக இதில் ஈடுபட்டுள்ளது டீம் இன்டஸ். இந்தியாவிலிருந்து நிலவில் கால் பதிக்கும் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ள ஒரே அமைப்பு இதுதான்.

ஒருங்கிணைக்கும் பணி...
டீம் இன்டஸ், தனது ரோபோட் ரோவரை நிலவுக்கு அனுப்பவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ரோபோட் ரோவரின் என்ஜீனியரிங் மாடலை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறது.

நிலவுப் பயணம்....
டீம் இன்டஸ் தொடங்கப்பட்டு 3 வருடமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலக அளவில் நிலவுப் பயணங்களை பெரும்பாலும் அரசு நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன. முதல் முறையாக தற்போது தனியார் விண்வெளிப் பயணத்தில் டீம் இன்டஸ் ஈடுபடவுள்ளது. 2015ம் ஆண்டு டிசம்பரில் டீம் இன்டஸின் ரோபோட் ரோவர் நிலவுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

புரோட்டோ டைப் மாடல்...
கடந்த செப்டம்பர் 29ம் தேதி முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு டீம் இன்டஸின் ரோபோட் ரோவர் திட்டத்தை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், டீம் இன்டஸ் குழுவின் புரோட்டோ டைப் மாடலுக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்ததாக டீம் இன்டஸ் அமைப்பின் இணை நிறுவனரான ஜூலியஸ் அம்ரித் தெரிவித்துள்ளார்.

மங்கள்யானின் திட்ட வடிவமைப்பாளர்...
கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவில் இந்திய விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் டீன் பேராசிரியர் வி. ஆதிமூர்த்தியும் இடம் பெற்றிருந்தார். இவர், இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வுக் கலமான மங்கள்யானின் திட்ட வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

1.25 மில்லியன் டாலர் பரிசு...
முன்னாள் ஐஐடி மாணவர்களான ராகுல் நாராயணன், இந்திரனில் சக்கரவர்த்தி, அம்ரித் ஆகியோர் இணைந்து டீம் இன்டஸ் அமைப்பை உருவாக்கியுள்ளனர். உலக அளவில் இதுபோல உருவாக்கப்படும் ரோவர்களை கூகுள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்து பரிசுகளை அறிவிக்கும். முதல் பரிசுத் தொகை 1.25 மில்லியன் டாலராகும்.

இஸ்ரோவின் உதவி தேவை...
எக்ஸ்பிரைஸ் நடுவர்கள் நவம்பர் 24 முதல் டிசம்பர் 14 வரை மாடல்களை ஆய்வு செய்யவுள்ளனர். இந்த திட்டம் முழுமை பெறவும், பரிசை வெல்லவும் இஸ்ரோவின் உதவி டீம் இன்டஸுக்குத் தேவைப்படுகிறது. அதாவது இந்த ரோவரை செலுத்த இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்த வேண்டும். இரண்டாவது இதற்குத் தேவையான நிதி. அதன் மதிப்பு 35 மில்லியன் டாலராகும்.

ரூ. 6 கோடி நிதி...
இதுதொடர்பான பேச்சுக்களில் டீம் இன்டஸ் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 2011ம் ஆண்டு மார்ச் முதலே நிதி சேகரிப்பில் டீம் இன்டஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக இறங்கி விட்டனர். அனைவரும் சேர்ந்து ரூ. 6 கோடி வரை திரட்டியுள்ளனர்.

நம்பிக்கை...
இந்த வருட இறுதிக்குள் மேலும் நிதி சேர்க்கும் திட்டத்தில் டீம் இன்டஸ் உள்ளது. அதேபோல இஸ்ரோவுடனும் பேச்சு நடத்தி வருகின்றனராம். விரைவில் நல்ல செய்தி வரும் என்று அம்ரித் கூறுகிறார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications