For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‛என்னை மன்னித்து விடுங்கள்’.. வாடிய முகத்தோடு மக்களிடம் கலங்கிய பிரதமர் மோடி..காணொலியில் உருக்கம்

Google Oneindia Tamil News

காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த வேளையில் காணொலியில் வாடிய முகத்தில் காட்சியளித்த பிரதமர் மோடி திடீரென்று மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கேட்ட உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. இது ஏன் என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே ரேசன் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் வசித்து வந்தார். அவர் பிரதமர் மோடியின் தம்பியான பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார்.

100வது பிறந்தநாளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடிய ஹீரா பென் மோடி திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஹீரா பென் உயிரிழந்தார்.

வாட்டிய வறுமை.. வீடுகளில் பாத்திரம் கழுவி வளர்த்த ஹீராபென்.. தாய் பற்றி பிரதமர் மோடியின் உருக்கம்வாட்டிய வறுமை.. வீடுகளில் பாத்திரம் கழுவி வளர்த்த ஹீராபென்.. தாய் பற்றி பிரதமர் மோடியின் உருக்கம்

நிகழ்ச்சிகள் ரத்து இல்லை

நிகழ்ச்சிகள் ரத்து இல்லை

அதாவது நேற்று முன்தினம் அகமதாபாதில் உள்ள யுஎன் மேத்தா இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் ஹீரா பென் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஹீரா பென்னின் உயிர் பிரிந்தது. பிரதமர் மோடி குஜராத் சென்று தாய் தாய் ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உடலை தோளில் சுமந்து சென்று தகனம் செய்தார். தனது தாய் மறைந்திருந்தாலும் கூட எந்த நிகழ்ச்சிகளையும் தலைவர்கள் ரத்து செய்ய வேண்டாம் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

காணொலியில் பங்கேற்பு

காணொலியில் பங்கேற்பு

இதற்கிடையே தான் இன்று பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை உள்பட ரரூ.7,800 கோடி மதிப்பிலான நலத்திடங்களையும் துவக்கி வைக்க இருந்தார். இதனை பிரதமர் மோடி இன்று நேரில் துவக்கி வைக்க இருந்த நிலையில் தாய் மறைவால் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கொல்கத்தா ஊதா நிற பாதையின் மெட்ரோ சேவை, போயிஞ்சி - சக்திகர் 3வது பாதை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி

மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி

இந்த நிகழ்ச்சியில் மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும்போது பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இதுபற்றி பிரதமர் மோடி கூறுகையில், ‛‛நான் இன்று மேற்கு வங்காளத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் என்னால் அங்கு வர முடியவில்லை. மேற்க வங்காளத்துக்கு வராமல் இருந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்'' என்றார்.

மம்தா பானர்ஜி பேச்சு

மம்தா பானர்ஜி பேச்சு

முன்னதாக மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி பேசினார். அப்போது தாய் ஹீரா பென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அவர் பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறியதோடு ஓய்வு எடுக்கும்படி கூறினார். அதோடு பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்தார். இதுதொடர்பாக காணொலி காட்சி வாயிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியிடம் கூறியதாவது:

ஓய்வு எடுங்கள்- மம்தா கோரிக்கை

ஓய்வு எடுங்கள்- மம்தா கோரிக்கை

இன்று ஒரு சோகமான நாள். உங்களின் தாய் தவறியுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். தாயின் மறைவை தாங்கி கொள்ள கடவுள் உங்களுக்கு வலிமையையும், ஆசீர்வாதத்தையும் தர பிரார்த்திக்கிறேன். உங்களின் செயல்பாடுகள் மூலம் நீங்கள் உங்கள் தாயை நேசிக்க முடியும். நீங்கள் இன்று மேற்கு வங்காளத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் தாயின் மறைவால் உங்களால் வர முடியவில்லை. இருப்பினும் உங்களின் திட்டத்தின் மூலம் நீங்கள் எங்களை அணுகி உள்ளீர்கள். தகனம் செய்த கையோடு நீங்கள் வந்துள்ளீர்கள். இந்த வேளையில் நான் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் பணிகளை குறைத்துது ஓய்வெடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்'' என உருக்கமாக கூறினார்.

English summary
Prime Minister Modi's mother Heera Ben Modi passed away early today. After his body was cremated, Prime Minister Narendra Modi inaugurated various projects in the state of West Bengal through video. At this time, a heart-warming incident took place where Prime Minister Modi, who appeared in the video with a withered face, suddenly apologized to the people of West Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X