டிரோன் வெடிகுண்டு வீச்சு.. ராக்கெட் தாக்குதல்.. பற்றி எரியும் மணிப்பூர். மீண்டும் பள்ளிகள் மூடல்!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்த நிலையில் அம்மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் மாரெம்பம் கொய்ரெங் வீடுதான் ராக்கெட் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான வன்முறை தொடர்ந்து வருகிறது. அத்துடன் பாதுகாப்பு படையினர் மீதும் குக்கி இனக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க மாநில அரசு முயற்சித்ததற்கு குக்கி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததில் தொடங்கியது மோதல். இதுவரையிலான வன்முறைகளில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
தற்போது குக்கி இனக்குழுவினர் தாங்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நிர்வாக அமைப்பை உருவாக்க கோருகின்றனர். இதற்கு மைத்தேயி, நாகா இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களான பெரும் வன்முறைகள் நிகழாமல் இருந்தன.
இந்த நிலையில் திடீரென மணிப்பூரில் வன்முறை மீண்டும் தலைதூக்கி உள்ளது. குக்கி இனக்குழுவினர் டிரோன்கள் மூலம் வெடிகுண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் மாரெம்பம் கொய்ரெங் வீடு மீது ராக்கெட்டுகளை வீசியும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது பாதுகாப்புத் தரப்பினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களிலான மோதல்களில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நீடிப்பதால் ஏற்கனவே பள்ளிகள் செப்டமர் 7-ந் தேதி வரை மூடப்பட்டிருந்தன. தற்போதும் அதே நிலைமை நீடிப்பதால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் இன்றும் நாளையும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மணிப்பூர் தீவிரவாத குழுக்களிடம் யுத்தங்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர்கள், டிரோன்கள் இருப்பது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அன்னிய சக்திகள்தான் மணிப்பூரில் வன்முறைகளை ஊக்குவிக்க ஆயுதங்களை வாரி வழங்குவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications