எனக்கும் வேணும்.. பத்ம பூஷணுக்காக அடிதடி... சாய்னா வழியில் விஜேந்தரும் போர்க்கொடி!
டெல்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தனது பெயரையும் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என இந்திய குத்துச்சண்டை சங்கத்திடம்ன் குஸ்தியில் குதித்துள்ளார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பத்ம பூஷண் விருதுக்கு தன் பெயரை பரிந்துரைக்கவில்லை என தன் அதிருப்தியை டுவிட்டர் மூலம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். ஊடகங்களில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து, பரிந்துரைக் கடிதம் தாமதமாகக் கிடைத்ததாகக் கூறி சாய்னா பெயரை பத்ம பூஷண் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இணைத்தது விளையாட்டுத் துறை அமைச்சகம்.

இதன் மூலம் சாய்னா விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் தன்னுடைய பெயரையும் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் விஜேந்தர் சிங். 2010-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. இந்நிலையில், ''பத்ம பூஷண் விருதுக்கு நான் தகுதியானவன். இந்திய குத்துச் சண்டை சங்கம் எனது பெயரை பரிந்துரைக்க வேண்டும்'' என இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பிடம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடமும் விஜேந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாய்னாவும் 2010-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். 5 ஆண்டுகள் இடைவெளியில் பத்ம பூஷண் விருதுக்காக சாய்னாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மபூஷண் விருதுக்கு இப்படி அடிதடி ஏற்பட்டிருப்பது விருதின் மதிப்பு குறித்த கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications