For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணியின் அடுத்த விக்கெட்டும் காலி? தெலுங்கு தேசம் எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக கூட்டணியின் அடுத்த விக்கெட்டும் காலி?- வீடியோ

    ஹைதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலக சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாடாளுமன்றத்தில், நேற்று 2018-2019ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் போது ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    ஏற்னவே இதுகுறித்த ஆந்திராவின் கோரிக்கையை ஏற்பதாக மத்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில், நேற்றைய பட்ஜெட்டின்போது அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    தொடர் புறக்கணிப்பு

    தொடர் புறக்கணிப்பு

    மக்கள் அதிகம் வந்து செல்லும் தியேட்டரிலேயே பலாத்கார சம்பவம் நடந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலம் நண்பர்களாபவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத நபருடன் வெளியே செல்வது ஆபத்தானது என்பதை பெண்கள் உணராத வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

    அவசர ஆலோசனை

    அவசர ஆலோசனை

    இதையடுத்து நேற்று மாலை அவசரமாக மூத்த அமைச்சர்களை அழைத்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். நாளை மறுநாள் தெலுங்கு தேசம் எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அமைச்சரவையில் இருந்து விலகல்?

    அமைச்சரவையில் இருந்து விலகல்?

    பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 16 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய அமைச்சரவையில் 2 பேர் உள்ளனர். பாஜகவுக்கு ஆதரவை விலக்கினால், அமைச்சரவையில் இருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்படலாம்.

    லோக்சபா தேர்தல் நெருங்குகிறது

    லோக்சபா தேர்தல் நெருங்குகிறது

    அமைச்சர் பதவிகளை தெலுங்கு தேசம் தியாகம் செய்யுமா அல்லது ஆந்திர மக்களிடம் நற்பெயரை ஈட்டும் நோக்கில், கூட்டணியை விட்டு வெளியேறுமா என்பது வரும் நாட்களில் வெளிச்சத்திற்கு வரும். மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் இப்போது மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான தெலுங்கு தேசமும் அதே பாதையில் செல்ல தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ள பாஜகவுக்கு இது பின்னடைவாக இருக்குமா அல்லது புது கூட்டணி கணக்கில் அக்கட்சி சென்றுகொண்டுள்ளதா என்பது விரைவில் தெரியவரும்.

    English summary
    Andhra Pradesh chief minister Chandrababu Naidu should raise a red flag for the BJP leadership that all is not well within the National Democratic Alliance (NDA).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X