டாடா அறக்கட்டளைகளின் ரூ. 3000 கோடி முதலீடு.. கேள்வி கேட்கிறது சிஏஜி
டெல்லி: டாடா குழுமத்தைச் சேர்ந்த இரண்டு அறக்கட்டளைகள் செய்துள்ள ரூ. 3000 கோடி முதலீடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது சிஏஜி எனப்படும் இந்திய தலைமைக் கணக்காயம்.
நாட்டின் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகளின் அறக்கட்டளைகளின் நிதி கையாளுகை குறித்து ஆடிட் செய்ததில் பல நிறுவனங்களின் அறக்கட்டளைகளுக்கு கொடுக்கப்பட்ட வரி விலக்கு அவை தவறாகப் பயன்படுத்தியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளது சிஏஜி.
இதில் டாடா நிறுவனங்களின் இரண்டு அறக்கட்டளைகளும், பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்களின் அறக்கட்டளைகளும் அடங்கும்.

புதிய சிஐஜி சர்மா
சிஏஜியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.கே.சர்மா இந்த ஆடிட் அறிக்கையில் கையெழுத்திடடுள்ளார். இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நிதியமைச்சகத்துக்கு கடிதம்
மேலும் இந்த அறக்கட்டளைகளின் நிதி மோசடி குறித்து நிதியமைச்சகத்திற்கும் சிஏஜி கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு வருமான வரித்துறையை பணித்துள்ளது நிதியமைச்சகம்.

மிகப் பெரிய பணத்தை முறைகேடாக முதலீடு செய்துள்ளனர்
சிஏஜி தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது... இந்த அறக்கட்டளைகள், தொண்டுப் பணிக்காக ஒதுக்கிய பணத்தை வேறு பல விஷயங்களில் முதலீடு செய்துள்ளன. மேலும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் முறைகேடாக மாற்றியுள்ளன.

டாடாவின் அறக்கட்டளைகள்
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஜாம்ஷெட்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் நவபாஜி ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தமாக ரூ. 3000 கோடியை பல்வேறு கணக்குகளில் முதலீடு செய்துள்ளன. இதை அறக்கட்டளைப் பணிக்கான முதலீடாக ஏற்க முடியாது.

ரூ. 1000 கோடியை பறிமுதல் செய்ய நடவடிக்கை
இதையடுத்து இந்த இரு அறக்கட்டளைகளிடமிருந்தும் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ. 1000 கோடியை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டாடா சன்ஸ் குழுமத்தில் 66 சதவீத பங்கு
டாடா நிறுவனங்களின் அனைத்து அறக்கட்டளைகளுக்கும் மூ்ல நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தில் 66 சதவீத பங்கு உள்ளது. டாடா சன்ஸ் குழுமத்தின் மொத்த நிதி மதிப்பு 100 பில்லியன் டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

80,000 அறக்கட்டளைகளில் ஆடிட்டிங்
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 6 லட்சம் அறக்கட்டளைகளில் 80,000 அறக்கட்டளைகளில்தான் தற்போது சிஏஜி ஆய்வு செய்துள்ளது.

தெரியாதே...
இந்த ஆடிட்டிங் அறிக்கை குறித்து டாடா சன்ஸ் விளக்குகையில் இந்த அறிக்கை குறித்து எங்களுக்குத் தெரியாது. இருப்பினும் வருமான வரித்துறை எங்களிடம் விளக்கம் கேட்டுள்ளது உண்மைதான். அதுகுறித்து நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications